நாவற்குழியில் விகாரை அமைக்க அனுமதி!

இலங்கையில் பௌத்தத்திற்கான முன்னுரிமையின் அடிப்படையில் நாவற்குழி விகாரையை அமைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சாவகச்சேரி நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை தேசிய புத்திஜீவிகள் சங்க சபை வரவேற்றுள்ளது.

இது குறித்து தேசிய புத்திஜீவிகள் சங்க சபையினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கையில்,

நாவற்குழி புத்த விகாரை நிர்மாணப் பணிகள் தொடர்பாக சாவகச்சேரி நீதிமன்றம் எடுத்த நடவடிக்கையானது பாராட்டத்தக்கது.

இந்த விகாரைக்கு சாவகச்சேரி பிரதேச சபை எதிர்ப்புத் தெரிவித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இதன் நீதிமன்ற விசாரணையில், இலங்கையில் தற்போதிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 9ஆம் சரத்தின் பிரகாரம் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். இதனடிப்படையில் பிரதேசசபையின் சட்டம் இரண்டாம் பட்சமாகவே கருதப்படும். இதனால் விகாரையின் பணிகளை முன்னெடுக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாகும். வடக்கில் தற்போது முதலமைச்சர் விக்னேஸ்வரனும், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் இனவாதமாக செயற்படுவதுடன், மக்களை குழப்பி அதன் வழியில் வழிநடத்த முயற்சிக்கின்றனர்.

இவ்வாறானவர்களுக்கு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்த சேகரன் ஏனைய மதத்துக்கு வழங்கிய முன்னுரிமையை சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தேசிய புத்திஜீவிகள் சங்க சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com