சற்று முன்
Home / செய்திகள் / நாவற்குழியில் தாதுகோபம் அமைப்பதற்கு எதிராக வழக்கு தொடர முடிவு !

நாவற்குழியில் தாதுகோபம் அமைப்பதற்கு எதிராக வழக்கு தொடர முடிவு !

யாழ்.நாவற்குழி பகுதியில் தாது கோபுரம் அமைக்கப்படுவது தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபை நீதி மன்றில் வழக்கு தொடர வேண்டும் என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30) யாழ் மாவட்டச் செயலகத்தில் தமிழரசுக் கட்சி பாராளுமடன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற பல்வேறு வாதப்பிரதிவாதங்களிற்கு மத்தியில் நாவற்குழியில் அமைக்கப்பட்டுவரும் தாதுகோபத்திற்கு எதிராக சாவகச்சேரி பிரதேச சபை ஊடக வழக்குத் தொடர்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட மாகாணசபை உறுப்பினர் சிவாஜலிங்கம், சில அரச அதிகாரிகள்தான் இவ்வாறான செயற்பாடுகளிற்கு துணைநிற்பதாக குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து நாவற்குழியில் உள்ள பொதுமகன் ஒருவர் கூறுகையில் தமிழ் மக்களுக்கு வீட்டு திட்டம் வழங்குவதற்கு நியதிகள் போடப்படுகின்றது. மேலும் தமிழ் மக்கள் ஒரு மதிலை கட்டுவதற்கும் கூட அனுமதி பெற வேண்டியிருக்கின்றது. ஆனால் சிங்கள மக்கள் எல்லாவற்றையும் தாங்கள் நினைத்தால்போல் செய்வது எப்படி? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில் சாவகச்சேரியில் ஒரு பிள்ளையார் ஆலயம் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி நீதிமன்றத்தினால் அந்த ஆலய கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விகாரை மட்டும் எப்படி அனுமதி இல்லாமல் கட்டப்படலாம்? என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து சபையின் ஒருங்கிணைந்த தீர்மானத்தின்படி சாவகச்சேரி பிரதேச சபை ஊடாக குறித்த தாது கோபுரம் அமைப்பதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவதென யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானித்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com