நாளை ராஜாவில் “மம்“ திரைப்படம் இலவசமாக பார்க்கலாம்!

இந்தியாவின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டி நாளை சிறீதேவி நடித்த மம் திரைப்படம்  யாழ்ப்பாணம் “ராஜா” தியேட்டரில் பிற்பகல் 2.30 மணியளவில் இலவசமாகத் திரையிடப்படும் என இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, நாளை பிற்பகல்2.30 மணியளவில் ராஜா தியேட்டரில் மம் திரைப்படம் இலவசமாகத் திரையிடப்படவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 16ஆம் நாள் சங்கிலியன் தோப்பில் பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுநாத் சகோதர்களின் வயலின் இசைக்கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 17ஆம் நாள் மஞ்சுநாத் சகோதர்களின் வயலின் இசைக்கச்சேரியும் பயிற்சிப் பட்டறையும் வவுனியா ஸ்ரீகந்தசுவாமி கோவில் கல்யாண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இவை தவிர, நாளை முதல் எதிர்வரும் 21ஆம் நாள்வரை நல்லூர் சுகாதாரப் பணிமனையில் தொடர் புத்தகக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. இதில் பல இலங்கை, இந்திய பதிப்பகங்கள் கலந்துகொள்ளவுள்ளன எனவும் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com