நாளை யாழ் வரும் மைத்திரிக்கு எதிராய் அணிதிரள அழைப்பு

தேசியத் தமிழ் விழா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை யாழ்ப்பாணத்துக்கு வந்தால் தாம் அவருக்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தப்போவதாக 20 பொது அமைப்புக்கள் கூட்டாக அறிவித்துள்ளன. நேற்று ஒன்றுகூடிய 20 பொது அமைப்புக்கள் எடுத்திருந்த தீர்மானம் இன்று ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்பாட்டத்தின்போது மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நாளை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் காலை 9 மணிக்கு பொதுமக்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்பட்சத்தில் நாளைய தமிழ்விழா நிகழ்வினைப் புறக்கணித்து அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com