நாளை முதல் மின்சாரத்துறை ஸ்தம்பிதமடையும் ஆபத்து?

தமது கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் உரிய தீர்வை முன்­வைக்­கா­வி­டத்து நாளை நண்­பகல் முதல் பரந்­து­பட்ட தொழிற்­சங்கப் போராட்­டத்தில் மின்­சார சபை ஊழி­யர்கள் இறங்­க­வுள்­ள­தாக இலங்கை ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்க முன்­ன­ணியின் ஏற்­பாட்­டாளர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்தார்.

மின்­சார சபை ஊழி­யர்கள் பல்­வே­று­பட்ட கோரிக்­கை­களை முன்­வைத்து நேற்று நண்­பகல் முதல் தொழிற்­சங்கப் போராட்­டத்தில் இறங்­கி­யுள்­ளனர். அது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மின்­சார சபை ஊழி­யர்கள் நீண்ட கால­மாக சம்­பளப் பிரச்­சி­னை­யினை எதிர்­கொண்­டுள்­ளனர். அதற்கு உரிய தீர்வு முன்­வைக்­கப்­பட வேண்டும். அத்­துடன் மின்­சார சபையில் ஏற்­பட்­டுள்ள நஷ்­டத்தை ஈடு­செய்­வ­தற்கு மின் கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்பு செய்­யு­மாறு மின்­சார சபையின் நிர்­வா­கத்­தினால் அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

எனினும் மின் கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்புச் செய்­யக்­கூ­டாது. ஏனெனில் மின்­சார சபையில் இடம்­பெறும் ஊழல் மோச­டி­க­ளி­னா­லேயே மின் கட்­ட­ணத்தில் ஐம்­பது சத­வீத சுமை­யினை பாவ­னை­யா­ளர்கள் எதிர்­கொள்ள நேர்­ந்துள்­ளது. ஆகவே அச்­ச­பைக்குள் நிலவும் மோச­டி­களை தடுப்­ப­துடன் மின் கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்புச் செய்­யக்­கூ­டாது.

மேற்­சொன்ன பிர­தான கோரிக்­கைகள் உட்­பட இன்னும் சில கோரிக்­கை­களை முன்­வைத்து தொழிற்­சங்கப் போராட்­டத்தில் இறங்­கி­யுள்ளோம்.

எனினும் வைத்­தி­ய­சாலை உட்­பட முக்­கிய இடங்­களில் பணியில் ஈடு­பட்­டுள்ளோம். இருந்த போதிலும் அர­சாங்­கத்­திற்கு நாம் நாளை வெள்­ளிக்­கி­ழமை நண்­பகல் வரை அவ­காசம் வழங்­கு­கிறோம். அக்­கா­லக்­கெ­டுவில் எமது கோரிக்­கை­க­ளுக்கு உரிய தீர்வு முன்­வைக்­கப்­பட வேண்டும். அல்­லாது போனால் நாளை வெள்­ளிக்­கிழமை நண்­பகல் முதல் பரந்­து­பட்ட தொழிற்­சங்கப் போராட்­டத்தில் இறங்­க­வுள்ளோம்.

அப்­போ­ராட்­டத்­திற்கு எதிராக அரசாங்கம் எவ்வகையான அழுத்தத்தை பிரயோகித்தாலும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிட்டும் வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com