சற்று முன்
Home / செய்திகள் / நாளை காலை 11 மணிக்கு முல்லைத்தீவில் போராட்டம்..

நாளை காலை 11 மணிக்கு முல்லைத்தீவில் போராட்டம்..

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்குவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது, சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை முல்லைத்தீவில் பெருமெடுப்பிலான போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நாளை காலை 11 மணிக்கு முல்லைத்தீவு பழைய வைத்தியசாலை (உண்ணாப்பிலவு வைத்தியசாலை) முன்பாக ஒன்று திரண்டு, பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று, அங்கு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படும்.

அரசாங்கத்திற்கான மகஜரை மாவட்ட செயலரிடம் வழங்கப்படும். ஐ.நா சபைக்கான மகஜரும் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, நாளை வடமாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். வடக்கு சட்டத்தரணிகள் நாளை முல்லைத்தீவு கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றுகிறார்கள்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com