நால்வரின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்ட பெண் மற்றும் அவர் இறப்பதற்கு முன்னர் அவரால் கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகள் ஆகியோரின் இறுதிச் சடங்குகள், நேற்று இடம்பெற்றன. அரியாலையில் உள்ள அவர்களது வீட்டில் முற்பகல் 11 மணியளவில் இறுதி சடங்குகள் இடம்பெற்றன. இதைத் தொடர்ந்து, செம்மணி இந்து மயானத்தில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் சடலங்கள், அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

11.7 மில்லியன் ரூபாய் பணத்தை, நெருக்கமான நண்பருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்து விட்டு, ஏமாற்றம் அடைந்த காரணத்தால், குறித்த பெண்ணின் கணவர், முதலில் தற்கொலை செய்து உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த பெண் மன உளைச்சலுக்குள்ளாகி இருந்த காரணத்தாலும், கணவரின் பிரிவைத் தாங்க முடியாத நிலையில் தனது 3 பிள்ளைகளுக்கும் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, தானும் விஷம் பருகி கடந்த வௌ்ளிக்கிழமை உயிரிழந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com