நாம் மூன்று புதல்வர் இருக்கும்வரை அப்பாவை ஒன்றும் செய்ய முடியாது – நாமல் ராஜபக்ச

மூன்று புதல்வர்களும் அவருக்கு பின்னால் இலட்சக்கணக்கான மக்களும் இருக்கும் வரை மகிந்த ராஜபக்சவை ஒன்றும் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம் பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.
மேலும் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவை தண்டிக்க போவதாக தெரிவித்திருந்தார். அவரின் அந்தக் கருத்து மகிந்த மீது அவர் கொண்டிருந்த வெறுப்பை காட்டுகின்றது. அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அதேபோல் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். ஆனால் மகிந்தவின் புதல்வர்களாகிய நாம் மூவரும் இருக்கும் வரை அவரை ஒன்றும் செய்து விட முடியாது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com