சற்று முன்
Home / செய்திகள் / நாமல் குமார கைது

நாமல் குமார கைது

ஊழல் ஒழிப்பு செயலணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளரும் ஜனாதிபதி மைத்திபால கொலைச்சதி வழக்கின் முதலாவது சாட்சியுமான நாமல் குமார கைது செய்யப்பட்டுள்ளார்.

வறக்காபொல உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்வதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இன்று (14) காலை நாமல் குமார கைது செய்யப்பட்டுள்ளார்.

வறக்காபொலயில் வன்முறையில் ஈடுபட்டோரை பொலிஸார் கைது செய்தனர். அவர்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தலையிட்டு பிணையில் விடுவித்தார். தயாசிறி ஜெயசேகரவுடன் நாமல் குமாரவும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com