நாமல் உட்பட அறுவரை சந்தேகநபர்களாகப் பெயரிட அனுமதி

636222835namal1நிதி மோசடி சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவரை சந்தேகநபர்களாகப் பெயரிட கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் வழங்கிய தகவலை கருத்தில் கொண்டே கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு ஹேலோ கோப் எனும் நிறுவனத்தின் 45 மில்லியன் ரூபா பெறுமதியான பங்கை பெறுவது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவர் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுரை பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் இந்திக்க பிரபாத் கருணாஜீவ என்பவர் வௌிநாடு சென்றுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்யுமாறு நீதவான் பிடியானை பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds