நான் போதையில் வாகனம் செலுத்தவில்லை – பிணையில் விடுதலையான விஜித்த ஹேரத்

1723152106Untitled-1தனது கைகளால் தவறு நேர்ந்ததை ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால் தான் மது போதையில் வாகனம் செலுத்தியதாக வௌியான குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகவும், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

தான் விபத்து ஏற்பட்ட போது போதையில் இருந்ததாக பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பேதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படக் காரணமாக இருந்தமை குறித்து விஜித்த ஹேரத் கைதுசெய்யப்பட்டதாக வௌியான செய்திகள் குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதன்படி, பொலிஸாரும் தான் மது அருந்தியிருந்ததாக கூறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீதியால் சென்று கொண்டிருந்த ஒருவரை காப்பாற்ற முற்பட்ட போதே இவ்வாறு தான் விபத்துக்கு முகம்கொடுக்க நேரிட்டதாகவும், விபத்து ஏற்படுவது இயற்கையே எனவும் விஜித்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com