சற்று முன்
Home / செய்திகள் / “நான் தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இப்படிச் சொல்கிறார் சி.வி.கே

“நான் தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இப்படிச் சொல்கிறார் சி.வி.கே

மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சராக மாவை சேனாதிராஜா போட்டியிடாவிட்டால் நானே முதலமைச்சர் வேட்பாளர் என முன்னாள் வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவுற்ற பின்னரான, திட்டங்கள் மற்றும் எதிர்வரும் மாகாண சபை வேட்பாளர் யார்? என கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்ய வேண்டுமென்று முன்மொழியப்பட்ட போது, மாவை சேனாதிராஜாவும் கைவிட்டதாலேயே தற்போது அநுபவிக்கும் நிலை ஏற்பட்டது.

மாவட்டக் கிளையின் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர், தமிழரசு கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமென்றும், தமிழரசு கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஆகக் குறைந்த சேவைக் காலத்தைக் கொண்டவராகவும் இருக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொது வாக மாவை சேனாதிராஜா முதலமைச்சராக வர விருப்பம் தெரிவித்த காரணத்தினால், ஏற்கனவே, மாவை சேனாதிராஜாவை ஆதரிப்பேன். சில சமயங்களில், மாவை சேனாதிராஜா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்படுமேயானால், அந்த இடத்தில், அடுத்த தெரிவாக, உரித்துடையவன் நான் என்பதே எனது நிலைப்பாடு. அந்த சந்தர்ப்பத்தில், எனது கோரிக்கையை முன்வைப்பேன்.

கட்சியின் செயல்நிலை மற்றும் மாகாண அங்கிகாரங்கள், கடந்த 5 வருடங்களில் நான் செயற்பட்ட விதங்கள், அநுபவங்கள், அறிவுகள், இவற்றின் அடிப்படையில், அந்தத் தகுதி எனக்கு இருக்கிறது என்பதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com