நான் கைது செய்த குற்றவாளியோடு நானும் குற்றவாளியாக – பொலிஸ் உத்தியோகத்தரின் வலிமிகு வாக்குமூலம்

தேவதயாளன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்றார். இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி தீர்ப்பு வழங்கிய போது குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

குறித்த வழக்கு மற்றும் தீர்ப்புத் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுதிய கட்டுரைக்கு முகநூவில் மறு மடல் எழுதியிருக்கிறார் தேவதயாளன்.
வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் தான் கைது செய்த குற்றவாளியோடு சிறைக் கம்பிகளுக்குள் குற்றச் சந்தேக நபராக இருந்த தனது மறக்க முடியாத அனுபவத்தை பகிர்கிறார் அவர்,

2016.10.19ம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சித்திரவதை குற்றம் சாட்டப்பட்டு அழைப்புக்கட்டளையின் பிரகாரம் மன்றில் ஆஐராகி இருந்தேன் . எனது வழக்கு அழைப்பதற்கு முன்னர் மேல் முறையீட்டு வழக்கு ஒன்று கூப்பிடப்பட்டது. குறித்த வழக்ககானது மல்லாகம் நீதவான் நீதிமன்றின் முன்னால் நீதிமன்ற நேரம் வாள் வெட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வழக்கு. இவ்வழக்கிற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றால் மூன்று குற்றவாளிகளுக்கு நான்கு வருடம் கடூளியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்ந தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் சட்ட த்தரணி மூலம் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கினை விசாரித்த கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி கூறினார் “நீதி தேவதை வாழும் ஆலயத்திற்கு முன்னால் வாள் வெட்டில் ஈடுபட்ட உங்கழுக்கு மன்னிப்போ, தண்டனைக்குறைப்போ வழங்கப்பட மாட்டாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். திரும்பி கூட்டில் நிற்கும் குற்றவாளிகளை பார்த்தேன் அதில் முக்கியமான குற்றவாளியை நானே கைது செய்திருந்தேன். பின்னர் எனது சித்திரவதை வழங்கு கூப்பிடப்பட்டது (திருடன் ஒருவனால் விடுமுறையில் இருந்த எனக்கு எதிராக செய்யப்பட்ட பொய்யான வாக்குமூலத்தில் எனக்கெதிராக தயாரிக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு பத்திரம்) பின்னர் எனது வழக்கினை விசாரித்த கௌரவ நீதிபதி சாட்சிகளை அச்சுறுத்தி விடுவேன் என கூறி ஏன்னை விசாரணை முடிவுறும் வரை விளங்க மறியலில் வைக்க உத்தரவிட்டார். சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டேன்.

அப்போது என் அருகில் இருந்த நான் கைது செய்த வாள் வெட்டு வழக்கின் குற்றவாளி என்னை பார்த்து கேட்டான் ” என்ன சேர்! என்ன பிடிச்சு போட்ட உங்களயே உள்ள போட்டிட்டாங்கள்” என்று அப்போது தான் சிந்தித்தேன் நானும் சாதாரண பொலிஸ்காரன் போல் கடமை செய்திருக்கலாம் என.!!
“ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று நீதிமன்றம் சொல்கிறது” அது அந்தக்காலம் இப்போ குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்பட கூடாது நிரபராதிகள் தண்டிக்கப் படலாம் என்ற அளவுக்கு காலம் மாறி விட்டது.

நானும் ஏன் மக்களுக்கு சேவை செய்ய போய் சிறைக்கு போகணும் யார் சொத்த யார் களவெடுத்தால் என்ன. யாரை யார் வெட்டினால் என்ன. பேசாமல் இருந்தமாம் லீவு எடுத்தமாம் சம்பளத்த எடுத்தமாம் என்று இரண்டாம் மொழி உதியோகத்தர்கள் போல் வேலை செய்வோம். இனிவரும் காலங்கள்!!!👮‍♀️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com