நான்தான் இப்பவும் அமைச்சர்

தானே இன்னமும் வடக்கு மாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சராகத் தொடர்வதாக டெனிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தனது பதவி பறிக்கப்பட்டது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டுள்ள அவர் தன்னைப் பதவிநீக்கம் செய்ய முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு நேற்று (24) தனித்தனியே கடிதங்களை அவர் அனுப்பிவைத்துள்ளார். எனினும் நேற்று (24) நடைபெற்ற மாகாணசபை அமர்வில் டெனீஸ்வரன் மிக அமைதியாக இருந்தார். அவர் அமைச்சுப் பதவிகள் குறித்தோ இன்று நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் குறித்தோ வாய்திறக்கவில்லை. இதேவேளை தனது அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிராக அவர் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com