நான்கு முக்கிய பதவிகளுக்கு அதிரடி நியமனங்கள்

 

கிழக்கு மாகாண ஆளுநர், இராணுவத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் ஆகிய முக்கிய நான்கு பதவிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அறிவித்துள்ளார். நால்வருக்குமான பதவியேற்பு மற்றும் நியமனக் கடிதங்கள் வழங்கல் நிகழ்வு இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதன்போது இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி வழங்கியுள்ளார். அவ்வகையில் கிழக்கு மாகாணத்தின் அளுநராக முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவும் இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும் பதவியேற்றுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் மேலதிக சொலிஸ்ரர் ஜனரலான கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகப் பதவி வகித்த ஒஸ்ரின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் புதிய செயலாளராக பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com