நான்காவது நாளாகத் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் – உண்ணாவிரதிகள் உடல்நிலை மோசமடைகிறது

காணாமல் போனோரின் உறவுகளால் இன்று (26) நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று (25) சென்ற வைத்தியர் குழு உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களை பரிசோதனை செய்ததன் பின்னரே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், வயோதிப தாய்மார் இருவரின் உடலில் சீனியின் அளவு மிகக் குறைவடைந்துள்ளதாகவும் இருவரும் மயக்கமுறும் நிலையில் உள்ளதாகவும் குறித்த வைத்தியர் கூறியுள்ளார்.

இவர்கள் மயக்கமுறும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதிக்குமாறும் அவர் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இளைஞர்கள் சிலர் ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதிகளவில் பிரசன்னமாகியுள்ளனர்.

அத்துடன், உண்ணாவிரதம் இருப்போருக்கு ஆதரவாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் இன்று பேரணியொன்றினை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக இன்றையதினம் (26) யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதம் மாற்றும் ஆரப்ப்பாட்டங்களை மேற்கொள்ள சில அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ளன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com