நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவு அதிகரிக்க கூடும்

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவு அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பல மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தென்மேற்று மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரங்களில் காலைவேளைகளில் மழை பெய்யும்.

தெற்கு மேற்கு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 முதல் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு , வடமேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் காலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும். கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் ஓரளவு மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com