நாட்டின் பல பாகங்களில் மழை – சீரற்ற காலநிலை தொடர்கிறது – ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

IMG_5344நாட்டின் பல மாகாணங்களில் இன்று அதிகாலை முதல் கடுமையான மழை பெய்திருந்தது.  மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிக மழையுடனான காலநிலை காணப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரில் பெய்த கடும் மழையின் காரணமாக, ஆமர்வீதி, தும்முல்ல மற்றும் ஹிங்குருகடை சந்தி போன்ற வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் போக்குவரத்துக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதேநேரம் இன்று காலை 8.30உடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், களுத்துறை மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது.  அங்கு 180.8 மில்லிமீற்றர் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடும் மழை காரணமாக, ஜின் கங்கையில் நீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் உடுகம பத்தேகம மற்றும் உடுகம – நெலுவை ஆகிய போக்குவரத்து வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களனி மற்றும் அத்தனகலு ஓய ஆகிய நதிகளின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் குறித்த நதிகளுக்கு அருகில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவுறுத்தியுள்ளது. இன்றையதினமும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com