சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / நாட்டின் அபிவிருத்தியில் வடக்கு – தெற்கு என்ற பேதம் இல்லை

நாட்டின் அபிவிருத்தியில் வடக்கு – தெற்கு என்ற பேதம் இல்லை

நாட்டு அபிவிருத்தி மற்றும் மக்கள் வாழ்க்கககை மேம்படுத்தும் திட்டங்களின் போது வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று காலை (ஜூலை 1) அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 1977ஆம் ஆண்டின் பின்னர், 2005 – 2010ஆம் ஆண்டுகளில் தங்கள் அரசு ஆட்சியில் இருந்த போது பெரியளவில் அபிவிருத்தி திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டதென பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறினார்.

அந்த மாகாணங்களில் மக்களின் வாழ்க்கை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் திட்டங்களுடன் தங்கள் அரசு செயற்பட்டதாக அவர் கூறினார்.

தங்கள் ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்ககளைத் தவிர, கடந்த நல்லாட்சி அரசு வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்காக எந்தவொரு மேம்பாட்டுத் திட்டங்களையும் செயற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை பிரதமர் முன்வைத்தார்.

வடக்கு மக்களுக்காக முன் நிற்பதாக கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அந்த மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குப் பதிலாக அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாத்திரமே செயற்பட்டதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச
சுட்டிக்காட்டினார்.

அந்த மக்கள் முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினைகளான குடிதண்ணீ்ர் சிக்கலுக்கு தீர்வு வழங்குவதற்காக தங்கள் அரசு முதலிடம் வழங்குவதாகத் தெரிவித்த பிரதமர், தற்போது வரையிலும் அதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக
குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு தெரியப்படுத்துவது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும்
என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரவித்தார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எகிறும் விலைவாசி – ஒரு கிலோ பால்மா 1300 ரூபா ? 400 கிறாம் 520 ரூபா ??

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com