நாடாளுமன்றத்தை உடனடியாக் கலையுங்கள் மகிந்த கோரிக்கை !!

நாங்கள் தான், உண்மையான எதிர்க்கட்சி என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி, நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து, நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு ​தெரிவித்து, கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதமராகும் திட்டம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தெளிவான வெற்றி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது குறித்து தற்போதைக்கு பேச வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப முதலே தாம் கூறி வந்தது, சுதந்திரக் கட்சி என்பது டார்லி வீதியில் அமைந்துள்ள கட்டடமோ பெயர்ப்பலகையோ கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். நாடு பிளவுபடுவதனை எதிர்த்தே வாக்களிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதனை எதிர்த்து மக்கள் வாக்களித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com