நாங்கள் பரீட்சைக்கு தயார் – இன்று உயர்தரப் பரீட்சை நாடுபூராக ஆரம்பம்

IMG_8404க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடுபூராகவுமுள்ள 2204 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் 74 ஆயிரத்து 614 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர். அத்துடன் 190 விசேட தேவையுடைய பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமையும் குறி்ப்பிடத்தக்கது.

மலையகத்திலும் 02.08.2016 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மற்றும் அட்டன் பொஸ்கோ கல்லூரி ஆகிய பாடசாலை மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.IMG_8382 IMG_8384 IMG_8393 IMG_8396
IMG_8407 IMG_8419 IMG_8423 IMG_8425 photo (1) photo (2) photo (3) photo (4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com