நாங்கள் இருக்கிறதா எழுந்து சென்றுவிடுவதா – சிவகரன் பேச்சால் சினம் கொண்டார் பசுபதி அரியரட்ணம்!

sivakaranஅரசியல் கைதி  விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள்  நூல் வெளியீடு 14-11-2016  திங்கட்கிழமை  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.  நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் தனது உரையில் மிகப்பெரிய நீதியரசரை  வடக்குமாகாண சபையிலே கொண்டுவந்து வைக்கப்பட்டது . அங்கு இருப்பவர்கள் எல்லாம் மிகுந்த கல்வியலாளர்கள் , நடந்தது என்ன  ,  ஒன்றும் செய்யவில்லை. ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்பது போல  வடக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சிக்குள்  எதிர்க்கட்சி என  வடக்கு மாகாண சபை பற்றி விமர்சனம்  செய்த போது வடமாகாண சபை உறுப்பினர்  பசுபதி அரியரட்ணம் இவர் பேசினால் நாங்கள் இருக்கிறதா எழுந்து சென்றுவிடுவதா  உரையினை நிறுத்துங்கள் எனக் கோரி  மேடையினை விட்டு வெளியேற  முயன்ற போது ஏற்பாட்டளர்களினால்  சமரசம் செய்யப்பட்டு நிகழ்வு  மீண்டும்  நடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அங்கு உரையாற்றிய சிவகரன் அப்படி என்னதான் பேசினார். சிவகரனின் உரை வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

img_8903

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com