சற்று முன்
Home / செய்திகள் / நாங்கள் இந்தியாவின் “ஏஜென்டுகள்” என்றால் நீங்கள் சீனாவின் “ஏஜென்டா” ? – சீறிப்பாய்ந்த சுரேஸ்

நாங்கள் இந்தியாவின் “ஏஜென்டுகள்” என்றால் நீங்கள் சீனாவின் “ஏஜென்டா” ? – சீறிப்பாய்ந்த சுரேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிஆர்எல்எவ் உள்ளிட்ட கட்சிகளின் எல்லா விடயங்களையும் எடுத்த எடுப்பில் உடனடியாகவே அது இந்திய ஏஜென்டுகள் செய்கின்ற வேலை அல்லது அவ்வாறானவர்களுடைய கருத்து அல்லது அவர்கள் சொன்னதை இவர்கள் செய்கின்றார்கள் என்று சொல்லிச் சொன்னால் நான் கேட்கின்றேன் நீங்கள் சீனாவினுடைய ஏஜென்டுகாளக இருக்கின்றீர்களா? என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

ஐனாதிபதித் தேர்தலுக்கான பொது ஆவணமொன்றைத் தயாரித்து கையொப்பம் இட்டுள்ள ஐந்து தமிழ்க் கட்சிகள் தொடர்பிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான விமசர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தார். இந்தக் கருத்துக்குக்குப் பதிலளிக்கும் வகையில் யாழ் கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே சுரேஸ்பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

தமிழ்த் தேசிய பரப்பில் இருக்கக் கூடிய ஐந்து கட்சிகள் இணைந்த 13 கோரிக்கைகளை ஐனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது கட்சிகளிடமும் முன்வைத்திருந்தன. இந்த 13 கோரிக்கைகளையும் உருவாக்குவதில் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈபீஆர்எல்எப், தமிழ் மக்கள் கூட்டணி உட்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய ஆறு கட்சிகள் இணைந்து தான் ஆவணங்களைத் தயார் செய்திருந்தோம்.

இதில் இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் இந்த ஆவணத்திலுள்ள அனைத்து விடங்களையும் முன்னணியும் ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனாலும் அவர்கள் கூறி ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு விடயம் இந்த ஆவணத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆகவே 13 கோரிக்கைகள் அடங்கிய இந்த ஆவணத்தில் ஐந்து கட்சிகள் கையொப்பமிட்டு ஏற்றுக் கொண்டிருந்தாலும் மக்கள் முன்னணியையும் உள்ளடக்கியதாக ஆறு கட்சிகளைக் கொண்ட ஆவணனமாகத் தான் இந்த ஆவணம் இருக்கின்றது.

குறிப்பாக இந்த ஆவணத்தை இறுதிப்படுத்துகின்ற நேரத்தில் மக்கள் முன்னணி தனது பல கருத்துக்களையும் திருத்தங்களையும் சொல்லியிருந்தது. அந்தத் திருத்தங்கள் யாவும் இதில் உள்ளடக்கப்பட்டும் இருந்தது. அவ்வாறான சூழ் நிலையில் தற்போது இந்த ஐந்து கட்சிகளும் இந்திய அரசாங்கம் சொல்வதைக் கேட்டுத் தான் இந்த வேலைகளைச் செய்த முடித்திருக்கின்றன என்றும்; இந்திய அரசாங்கத்தினுடைய ஏnஐன்டுகளாக இவர்கள் செயற்படுகின்றார்கள் என்று கூறுவதுமான இவர்களது கருத்தக்களில் பலத்த சந்தேகங்கள் எழுகின்றது.

ஏனென்றால் இந்த ஆவணத்தில் வந்திருக்கின்ற விடயங்களில் பல திருத்தங்களைச் சொன்னவர்கள் இவர்கள் தான். ஆகவே இவர்கள் யார் சொல்லி இந்தத் திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆதில் விசேசமாக இந்தியா சொல்லித் தான் இந்தத் திருத்தங்களைக் கொண்டு வந்தார்களா? ஏன்ற கேள்வி உள்ளது. ஏனென்றால் இந்தத் திருத்தங்கள் உள்ளடங்கிய ஆவணத்தைத் தான் இப்போது இவர்கள் விமர்சிக்க முற்படுகின்றார்கள்.

ஆகவே இந்தத் திருத்தங்களைச் சொன்னதால் அவர்களுக்கும் இந்த ஆவணத்தில் முழுமையான பங்கு பற்றல் இருக்கின்றது. அந்த வகையில் அவர்களும் ஏற்றுக் கொண்ட இந்த ஆவணத்தை ஆதரித்து கையெழுத்து வைத்தவர்களை இந்திய அரசின் ஏnஐன்டுகள் என்று சொல்லி அவர்கள் பேசுகின்றனர். உண்மையில் இந்தியா என்று சொன்னாலே பிரச்சனை என்ற விதமான நோய் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஏனெனில் எல்லா விடயங்களையும் பார்க்கின்ற போதும் எடுத்த எடுப்பில் உடனடியாகவே அது இந்திய ஏஜென்டுகள் செய்கின்ற வேலை அல்லது அவ்வாறானவர்களுடைய கருத்து அல்லது அவர்கள் சொன்னதை இவர்கள் செய்கின்றார்கள் என்று சொல்லிச் சொன்னால் நான் கேட்கின்றேன் நீங்கள் சீனாவினுடைய ஏஜென்டுகாளக இருக்கின்றீர்களா?

ஏனெனில் உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் தொடர்ச்சியாகவே இந்தியாவை சாடி வருகின்றீர்கள். அதிலும் நீங்களும் சேர்ந்து செய்கின்ற வேலைகளுக்கு இந்திய முத்திரையைக் குத்துவது ஏன் என்பது எனக்கு விளங்கவில்லை. ஆகவே கஜேந்திரகுமார் அவர்களுக்கு மிக மோசமான வகையில் ஒருவிதமான வருத்தம் நிச்சயமாக இருக்கின்றதாகவே நான் நம்புகின்றேன். அதாவது இந்தியா என்று சொன்னாலே அவர்களுக்கு ஒரு விதமான வருத்தம் வருவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

ஆகவே அவர் முதலில் தனது நிலைப்பாடுகள் உணர்வுகள் எல்லாம் சரியா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக நான் கருதுகின்றேன். ஏனென்றால் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆறு கட்சிகளையும் அழைத்து பேசியிருந்தார்கள். அதற்கமைய ஐந்து முறை கலந்து பேசி ஐந்தாம் முறையாக இறுதியில் கையொப்பம் வைக்கக் கூடிய சூழ்நிலையில் தான் இவர்கள் ஒரு கோரிக்கைளை ஏற்கும் படி கூறினார்கள். ஆனால் அதை பல பேர் ஏற்கவில்லை.

இன்றைக்கு இந்த ஆவணத்தில் இருக்கக் கூடிய அனைத்தும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் என்றே மீண்டும் சொல்கின்றேன். ஆறு கட்சிகளும் ஏற்றுக் கொண்ட விடயங்கள் தான் ஆவணத்திலும் இருக்கிறது. அவ்வாறான சூழ்நிலையில் சிங்களக் கட்சிகளிடமும் சிங்கள வேட்பாளர்களிடமும் இது தொடர்பான கருத்துக்களைக் கேட்கக் கூடிய சூழ்நிலையில் இதற்கு எதிராகப் பேச முனைவது என்பதும் இதனை விமர்சிப்பதென்பதும் என்ன அடிப்படையில் இதனைச் செய்ய அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பது விளங்கவில்லை.

இது விடயம் சம்மந்தமாக இன்னும் சொல்லப் போனால் தாங்கள் சொன்ன மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தால் இப்பொழுது கூட் கையெழுத்து வைக்க தயாராக இருக்கின்றதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இப்போதும் அவ்வாறு கூறக் கூடியவரகள் என்ன அடிப்படையில் இது இந்திய ஏnஐன்டுகள் கொண்டு வந்த விசயம் என்று கூறுவார்கள்.

அப்படிக் கூறுவதாக இருந்தால் தாங்கள் சொன்ன மாற்றத்தை செய்து கையெழுத்து வைப்பது எந்த அடிப்படையில் வருகிறது. குறிப்பாக அண்மையில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனுடன் நான் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டிருந்தேன். அதில் அவர் பேசுகின்ற போது இப்பொழுதும் தாங்கள் கூறிய மாற்றத்தை செய்வதாக அல்லது தங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் கையெழுத்து வைக்கத் தயார் என்று சொல்லியிருந்தார்.

ஆகவே நான் நம்புகின்றேன் தங்களுக்குள் தேவையற்ற முரண்பாடுகளை அவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த முரண்பாடுகளைக் குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும். தாங்கள் சொல்வது குறித்த உள்ளுக்குள்ளேயே பல முரண்பாடுகள் இருக்கின்றன என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆகவே அந்த முரண்பாடுகளை கைவிட்டு என்ன வழியில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று பார்க்க வேண்டும். வெறும் சித்தார்ந்தங்களையும் தத்துவங்களையும் பேசிக் கொண்டிருப்பதனூடாக இதனைத் தீர்க்க முடியாது.
இதற்கு சரியான பொறிமுறைகளை வழிமுறைகளைக் கண்டு கொள்ள வேண்டும். இயன்றவரை அதற்கான சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. எடுக்கப்பட்ட சில முயற்சிகளை குழப்பத் தேவையில்லை. ஆனால் அந்த முயற்சிகள் அத்தனையும் சரியாக வர வேண்டுமென்றும் அல்ல. அதில் பல பிரச்சனைகளும் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே கNஐந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியினரும் இந்தப் பிரச்சனைகளினுடைய முக்கியத்தவங்களைப் புரிந்து கொண்டு ஊடகங்களுடன் பேசுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இதே வேளை ஐந்து கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை சிங்களக் கடும் போக்குடையவர்கள் இனவாதத் கண்கொண்டு பார்க்கின்றார்கள். இந்தக் கோரிக்கைகள் என்பது ஏதோ தனிநாட்டுக் கோரிக்கையாகப் பார்த்து அதனை வைத்து இனவாத ரீதியான பிரச்சாரங்களை முன்னெடுப்பதென்பது முழு முட்டாள்தனமாகும்.
இந்தத் தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தமிழின விரோத பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். ஆகவே தமிழ் கட்சிகளின் இந்த 13 ஆம்சக் கோரிக்கைகக்கும் தனிநாட்டுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. இது முட்டாள் தனமான வாதம் அந்த வாதத்தை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கிறோம்.

மேலும் இத் தேர்தல் தொடர்பாக ஐந்த கட்சிகளும் கூட்டாக இணங்குவதென்று முடிவெடுக்கப்பட்டு 13 அம்சக் கோரிக்கைகளும் முனவை;க்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வர்களுக்கு வாக்களிக்க முடியுமென்பதை நாங்கள் தெளிவாக கூறியுள்ளொம். இதனை பார்த்தவுடனேயே கோத்தபாய நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார். அது சிங்கள பௌத்த வாக்கை எடுப்பதற்கான பிரச்சார உத்தி என்று தான் நாங்கள் பார்க்கின்றோம்.
அதே சமயம் ஐக்கிய தேசியக் கட்சியும் சந்தித்து பேச நேரம் ஒதுக்குவதாக கூறியிரந்தாலும் இதுவரையில் அவ்வாறான நேரம் ஒதுக்கப்படவில்லை. அதனால் அவர்களுடனும் பேசிவ்லலை. கையெழுத்து வைத்த ஒரு வராமாகியதால் நாங்கள் எல்லோரும் மீண்டும் ஒரு தடவை கூடி இதுவரையும் என்ன நடைபெற்றிரப்பதென்பதை ஆராய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக நான் கருதுகின்றேன். அதனுர்டாக அடுத்த கட்டம் தொடர்பாக முடிவெடுக்கலாம் அது தான் சரியானதாக இருக்குமென்பதே என்னுடைய கருத்தாகும் என மேலும் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com