நாங்களும் அரசியல் கதைக்கவேண்டிவரும் – அஸ்மினைப் பார்த்துச் சீறினார் சிறிதரன் எம்.பி

மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுடைய பேச்சு இனரீதியான பிரச்சினையைத் தோற்றுவிக்கக்கூடியது. அவரது பேச்சு நூறு விகிதம் பிழையானது. அவர் இவ்வாறு தொடர்ந்து பேசினால் நாங்களும் அரசியல் கதைக்கவேண்டிவரும் என எச்சரித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்.பி. ஒரு அரச அதிகாரியை நடுச்சபையில் வைத்துச் சாடுவது ஏற்றுக்கொள்ள முடியாத மிக மோசமான செயல் எனவும் குறிப்பிட்டார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலகத்தில் 28.02.2016 அன்று நடைபெற்றபோது அங்கு கருத்துத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் யாழ்ப்பாணத்தில் அதிகாரிகளினால் முஸ்லீம் மக்கள் ஓரங்கட்டப் படுவதாகவும், அவர்களிற்கு எந்தவிதமான உதவித்திட்டங்களும் வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவித்ததோடு அவர்களிற்கு வழங்கப்படவிருந்த வீட்டுத்திட்ட உதவிகள் கூட தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவுமு் குறிப்பிட்டார்.

டக்ளஸ் தேவானந்த அமைச்சராக இருந்தபோது யாழ். முஸ்லீம் மக்களிற்கு வழங்க முன்வந்த 300 பேருக்கான வீட்டுத்திட்டம் கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. யாழ்ப்பாணம் பிரதேச செயலக செயலர் அவற்றைத் தடுத்து நிறுத்திவிட்டார். அவர் மோசமாகச் செயற்படுகின்றார். அவரிற்கு இடமாற்றம் வந்தது. அதுகூட தடுக்கப்பட்டுவிட்டது. அவரிற்கு இடமாற்றம் வழங்கும்போது மக்களுடன் தொடர்புபடாத திணைக்களத்தில் நியமனம் வழங்கப்படவேண்டும் என்றார்.

அதன்போது அவரிற்கு ஆதரவாகப் பேசிய மாகாணசபை உறுப்பினர் ஆனோள்ட் குறித்த பிரதேச செயலர் நாவாந்துறை உள்ளிட்ட பிரதேச மக்களிற்கும் பாகுபாடு காட்டுவதாகவும் அவர் சில குடும்பங்களிற்கு இன்னமும் குடும்ப அட்டைகூட வழங்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.

அன்போது குறுக்கிட்டுப் பேசியபோதே சிறிதரன் எம்.பி அஸ்மினது செயலைக் கடுமாயாகச் சாடினார்.

ஊடகவியலாளர்கள், பிரதேச செயலகங்களின் அதிகாரிகள், ஏனைய திணைக்கள அதிகாரிகள், மக்கள் முன்னிலையில் ஒரு அதிகாரியை இவ்வாறா குற்றஞ்சாட்டுவது. அவர்கள் உயர் படிப்புக்கள் படித்தவர்கள், நாம் அவர்களிற்கான மதிப்புக்கொடுக்கவேண்டும். அவரின் செயற்பாடுகளில் தவறு இருப்பின் அதிருப்தி இருப்பின் அது மூடிய அறைக்குள் வைத்து விசாரிக்கப்படவேண்டும். அவரிற்கு என்ன இடமாற்றம் கொடுக்கவேண்டும் என தீர்மானிக்கும் அதிகாரம் உங்களிற்கு இல்லை. அனை மேல் அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்.

ஒரு பெண் அதிகாரி என்றும் பார்க்காமல் நீங்கள் நடந்துகொள்ண்ட செயற்பாட்டை நான் ஏற்கமாட்டேன். நான் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன். நாங்கள் தமிழ் முஸ்லீம் என பாகுபாடு காட்டவில்லை என்றார்.

இதன் போது வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இது தொடர்பாக அரசாங்க அதிபர் யாருக்கும் பாரபட்சம் நடந்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.இந்திய வீட்டத்திடடம் தொடர்பாக கதைத்த மாகாண சபை உறுப்பினர் அவர்களே நாங்கள் சவுதி அரேபியா வீட்டுத்திட்டம் தொடர்பாக ஏதும் கேட்டோமா என வினவினார்.முஸ்லீம் மக்களிற்கு வீடுகள் கிடைக்காவிட்டார் எதிர்வரும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் சற்று கூட்டி வழங்கலாம்.ஆனால் மோசடி செய்பவர்கள் தொடர்பாக குறித்த அதிகாரி தடுத்துள்ளார்.ஆனால் அதற்காக அவரை தூற்றுவதா என இணைத்தலைவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

பின்னர் பதிலளிததுப்பேசிய யாழ்ப்பாணம் பிரதேச செயலக செயலர், வீட்டுத்திட்டத்தில் முஸ்லீம் மக்கள் புறக்கணிக்கப்பட்டதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து உரையாற்றினார். வீட்டுத்திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களில் பலரிற்கு யாழ்ப்பாணத்தில் சொந்தக் காணிகள் இல்லை எனவும், ஏனையவர்களில் பலர் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயரந்து சென்று வாழும்பிரதேசங்களில் தமக்கான வீட்டுத்திட்டம் உள்ளிட்ட உதவித்திட்டங்களைப் பெற்றுவிட்டதாகவும் சிலர் அதிக வரமான அந்தஸ்துக்கொண்டவர்கள் என்ற அடிப்படையிலுஐம அவர்களது விண்ணப்படங்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவை குறித்து ஆராய்ந்து நடவடி்க்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com