நாகர்கோவில்    அருள்மிகு முருகையா தேவஸ்தான வருடாந்த திருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும்  

murugaiyaheaderநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான வருடாந்த திருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதிஞாயிற்றுக்கிழமை வெகு  விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது!
இத்திருவிழாவினை முன்னிட்டு  மாலை 6:00 மணியளவில் ஆலய முன்றலில் S.P.B சரண் மற்றும் தென்னிந்தியகலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் மாபெரும் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.மேற்படி  இந்த இசைநிகழ்ச்சியில் யாழ் இந்தியதுணை தூதுவர் ஆர். நட்ராஜன அவர்கள் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்விஜயகலா மகேஸ்வரன்,யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினல் குறேய்  ஆகியோர் சிறப்பு  அதிதியாகளாககலந்துக்கொண்டு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் பலதிறமைவாய்ந்த நாதஸ்வர வித்துவான்கள் முழங்கிய நாதஸ்வரக்கச்சேரிகளுடன், வில்லுப்படல்,நாகர்கோவில் கலைக்குடும்பம் வழங்கும் பக்திப்பாடல் இசைநிகழ்ச்சி, பல வண்ண மின் விளக்குகளுடன் பக்தர்கள்வெகுவிமர்சையாககொண்டாடவுள்ள கண்கொள்ளாக் காட்சிகளில் புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் மக்களும்கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.
யுத்தத்தினால் பாதிப்படைந்த மேற்படி இக்கோவில் யுத்தம் முடிவுற்று 7 வருடத்தின் பின்னர் தொடர்ந்து 2 வருடமாகவருடாந்த  உற்சவத்தை  கொண்டாடிவருகிறது.   இக்கோவில் உற்சவத்திற்கும் அதன் அபிவிருத்தி பணிகளுக்கும்தன்னால் இயன்ற  நிதிஉதவிகளை மேற்கொண்டு வருகின்றார் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஆலய தொண்டரானமயில்வாகனம் கெங்காசுதன்;. அத்துடன் அவரும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் ஆலயதிருப்பணி வேலைகளில் பாரிய நிதிப்பங்களிப்பினைவழங்கி ஆலய நிர்வாக சபையினருடன் ஒத்துழைப்புநல்கியிருந்தனர்.
வடமராட்சி –  நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாக கொண்ட    இளம் வாலிபரான கெங்காசுதன் கடந்த இரண்டு தசாப்தகாலங்களாக அவுஸ்திரேலியாவி;ல் வசித்து வரும்; அந்நாட்டின்; பிரபல வர்த்தகர் ஆவார். நாகர்கோவில் பூர்வீக அருள்மிகுமுருகையாஎம்பெருமானின் பக்தன்
1996 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த கெங்காசுதன்  யுத்தத்தின் நிமித்தம் கல்வியைதொடரமுடியாமல் இரத்த சொந்தங்களை இழந்து தாய் தந்தை மற்றும் சகோதர சகோதரியுடன் வெளிநாட்டிற்குஇடம்பெயர்ந்தார்.
’50 சதத்திற்கும் வழியின்றி உடுத்த உடையுடன் யுத்த வடுக்களுடன் நாட்டைவிட்டு வெளியேறிய என்னையும் எனதுகுடும்ப அங்கத்தவர்களையும் காப்பாற்றி நல்லதொரு நிலைமைக்கு கொண்டுவந்தவர் நாகர்கோவில் வடக்குவீட்டிருக்கும் அருள்மிகுஎம்பொருமான் முருகையா!  கடந்த இரண்டு வருடங்களாக எம்பொருமானின் திருவிழாபணியில் பங்கெடுத்துக்கொள்ள எமக்கு வசதியை ஏற்படுத்தி கொடுத்தமை யாம்பெற்ற வரமே……! யார்கண்பட்டதோகடந்த மூன்று தாசாப்த காலமாக  நாகர்கோவில் பூர்வீகஅருள்மிகு முருகையா எம்பெருமானுக்கு அலங்காரத் திருவிழாநடார்த்திபார்க்க முடியாமல் போனதால் அடியவர்களுக்கு மிகுந்த வேதனை. கவலையுடன் வாழ்ந்தமக்கள் 2015 ஆம்ஆண்டு மிகமிக சிறப்பான முறையில் திருவிழவை கொண்டாடினர். ஆனால் இன்றுஎம்பெருமான் கிருபையினால் இந்தவருடம் 02ஆவது தொடர் திருவிழாவின் முதலாவது மணவாளக்கோல (வருஷாபிஷேகம்)  சிறப்பாக நடைபெறவிருக்கிறதுஎன்பதை அனைவரும் அறிந்துகொண்டுள்ளீர்கள்.  எம்பெருமானை மனமுருகி வேண்டிவழிபடுகின்றமெய்யடியார்களின் துன்பங்களையும் மாறாத பிணிகளையும் நீக்கியருள் பாலிக்கின்றார். ஆலயத்தில் தற்போதும்வருடாவருடம் நடைபெற்று வரும் சித்திரை மாத ரோஹிணி வளர்ந்து நிகழ்வு அதற்குச் சான்றாகும். இவ்வாலயம்மிகவும்புதுமையானது அதிசயமானது 400 ஆண்டுகள் பழமையானது பல பக்தர்களின் குறைகளை தீர்த்து அடியவர்களைக்காப்பாற்றிய ஆலயம் இவ்வாலயம் கடந்த காலங்களில் வைத்தியர்களினால் குணப்படுத்தமுடியாத பல தீராதநோய்களை தீர்த்துள்ளது.இவ்வாலயத்தில் நோயுற்றவர்கள் வேண்டுதல்களை முன்வைத்து நோய் பூரண குணமானதும்நேர்த்திக்கடன்களை செலுத்தி எம்பெருமானை தரிசனம் செய்வார்கள்’  என்றார் கெங்காசுதன்
தல வரலாறு
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தல விருட்சம் என்பன ஒருங்கேஅமையப்பெற்ற பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாகும். இந்த ஆலயம் இற்றைக்கு சுமார் 400 வருடங்களுக்கு முன்னதாகஎமது கிராம முன்னோர்களால்ஸ்தாபிக்கப்பட்டது. அன்று தொட்டு முருகையா கோவில் எனவே இந்த ஆலயம்அழைக்கப்பட்டு வருகிறது.
அற்புதங்கள்
ஆலயம் கொட்டிலாக இருந்த காலத்தில் அருகில் வசித்து வந்த அன்பர் ஒருவர் தினமும் வெளிமண்டபத்தில் விளக்கேற்றிவழிபாடு செய்து வருவது வழக்கம். அவர் ஒருநாள் இரவு சென்று வழமை போல் விளக்கேற்றி விட்டு தனது வறுமைநிலையைமுருகையாவிடம் சொல்லி முறையிட்டு மிகவும் வருத்தமுற்று அழுது வணங்கியுள்ளார். சற்று நேரத்தில்அவ்வன்பரை யாரோ ஒருவர் வந்து கட்டிப் பிடித்துள்ளார். அவ்வமயம் யாரடா நீ? விடடா என்னை விடடா என்று சத்தம்போட்டுள்ளார். அப்போது முருகையாஅவரிடம் நான் தான் உனது கவலையைப் போக்க வந்துள்ளேன். நீ பயப்படாதேஎன்று அவருடன் அளவளாவி, நீ எனக்கு செய்ய வேண்டிய பணியை தொடர்ந்து செய். இன்றிலிருந்து உனது கஷ்டம்எல்லாம் நீங்கிவிடும். நீயும் உனது சந்ததியும் செல்வச் சிறப்போடுவாழுவீர்கள். ஆனால் உங்கள் சந்ததிக்கு ஆயுள்குறைவு என்றும் கூறிவிட்டு மறைந்ததாக முன்னோர்கள் கூறுவர். ஆனால் எம்பெருமான் திருவாக்கின்படி அவர்களுடையசந்ததியினர் குறைந்த வயதில் மரணமடைந்து விடுவர். அத்துடன் அன்றிலிருந்துஇற்றைவரை அந்த அன்பரின்சந்ததியினர் மிக செல்வச் சிறப்போடு வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறாக எம்பெருமானின் அற்புதங்கள் பலப்பல.
அந்த காலத்தில் அதாவது 1985ம் ஆண்டு காலப்பகுதியில் ஆலயம் முற்றாக இடிக்கப்பட்டு புதிதாக ஆலயம்புனரமைக்கப்பட்டது. அப்போது ஆலய மூலமூர்த்தியாக விளங்கிய வேலுக்கு அமைவில்லாமல் பெரிதாக மூலஸ்தானம்அமைந்து விட்டதாக கூறிகுருக்கள்மார் பழைய வேல் ஸ்தாபனம் செய்ய முடியாது என கூறியதற்கிணங்க 1993ம் ஆண்டுகும்பாபிஷேகத்தின் போது மூல முர்த்தியான வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகையா விக்கிரகம் ஸ்தாபனம்செய்யப்பட்டது. அதன்பிறகு நாட்டுச் சூழ்நிலைகாரணமாக இடம்பெயர்வுகளினாலும் அனர்த்தங்களினாலும் ஆலயபூஜை வழிபாடுகள் 2000 ஆம் ஆண்டு முற்றாக நிறுத்தப்பட்டது.
பின்னர் அதாவது 2012ம் ஆண்டு எமது கிராமத்திற்கு மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டதையடுத்து மக்கள் வந்துபார்த்த போது ஆலயம் அதிகமாக சேதமடைந்திருந்தது. அதனையடுத்து அந்த வருடம் வைகாசி மாதம் ஆலயம்பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.அப்போது வெளிவீதியில் இருந்த பரிவார தெய்வங்களையும் பாலாலயத்திற்குள்வைத்தே ஸ்தாபனம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலய திருப்பணிகள் நடைபெற்ற போது எம்பெருமான்திருவருளை மனதிற்கொண்டு வெளிவீதியில் இருந்து ஐயனார்,வீரமஹாகாளியம்மன் ஆகிய மூர்த்திகளையும்உள்ளடக்கி பரிவார ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன ஆனால் இன்றைய நிலையில் ஆலயம் அருள்மிகு முருகையா தேவஸ்தானம் என்ற பெயருடன் புதுப் பொலிவுடன்கம்பீரமாக காட்சியளிக்கின்றது.
தற்போது ஆலயம் அழகிய மூலஸ்தான விமானத்துடன் பரிவார தெய்வங்களாக பிள்ளையார், ஐயனார்,வீரமஹாகாளியம்மன், நடராஜர், வைரவர் மற்றும் வசந்த மண்டபம், மணிக்கோபுரம் என்பன அமைக்கப்பட்டு மிகச்சிறப்பாக 2015ம் வருடம் கும்பாபிஷேகம்நடாத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஐந்து தள இராஜகோபுரம் அமைப்பதற்காக கடந்த 2013ம் ஆண்டு அதற்கான அடிக்கல் தெல்லிப்பளைதுர்க்காதேவி அம்மன் ஆலய தர்மகர்த்தா ஆறு.திருமுருகன் அவர்களினால் நாட்டப்பட்டது. அதற்கான பணிகள்இடம்பெற்று தற்போது வியாழ வரிசைவரை பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.. இனி மேலே 5 தள பண்டிகை, சிற்பங்கள்என்பன அமைக்க வேண்டியுள்ளது.
தற்போது ஆலயத்தில் தினமும் மூன்று காலப் பூஜைகளும் வெள்ளிக்கிழமைகளில் விசேட அபிஷேக ஆராதனைகளுடன்மூன்று காலப் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அடியார்களால்அன்னதானமும் வழங்கப்பட்டுவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com