சற்று முன்
Home / செய்திகள் / நவாலியில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்

நவாலியில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்

யாழ்.நவாலி- அட்டகிாி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கிவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலே

வீட்டில் இருந்தவர்களை வாள்களைக் காண்பித்து மிரட்டிவிட்டு வீட்டிலிருந்த பொருள்கள், தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com