நல்லூர் வீதியில் அஞ்சலி நிகழ்வுக்கு அழைப்பு

நல்லூரில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு அஞ்சலிகூறும் நிகழ்வு ஒன்றிறை நாளை (24) ஏற்பாடு செய்துள்ள தமிழ் இளைஞர்கள் அணி இத்தாக்குதல் சம்பவமானது நீதித்துறை மீது நேரடியாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே தாம் கருதுவதுாக குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அவர்களால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,

ஊடக அறிக்கை –

தமிழ் இளைஞர் அணி நேற்று (22) மாலை நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நேரடியாக தன்னை இலக்கு வைத்தே நடத்தப்பட்டதாக நீதிபதி மா.இளஞ்செழியன் அறிவித்திருந்தார். இது நீதித்துறை மீது நேரடியாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே நாம் கருதுகிறோம். இந்த சம்பவத்துக்கு பலர் பலவிதமான விளக்கங்களை கூறுகின்றனர். எது எவ்வாறு இருப்பினும் இந்த சூட்டுச்சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ் இளைஞர்களாகிய நாம் இந்த சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்பாதுகாவலர் (உப பொலிஸ் பரிசோதகர்) ஹேமச்சந்திரவுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளை இந்த சம்பவத்தில் பொலிசார் பக்கச் சார்பற்று முழுமையான நீதியான விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என நாட்டின் நீதித் துறைமேல் நம்பிக்கை வைத்துள்ள குடிமக்கள் அனைவரின் சார்பாக நாம் இந்த வேண்டுகோளை விடுக்கிறோம். அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டறிவதுடன் நாட்டில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ஹேமச்சந்திரவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று நாளை (24) மாலை 5.45 மணிக்கு நல்லூர் ஆலய பின் வீதியில் நடத்த தமிழ் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் நீதியையும், மனிதத்தையும் மதிக்கும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுசார்பில் அழைப்பு விடுக்கிறோம். நன்றி.

தமிழ் இளைஞர் அணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com