சற்று முன்
Home / செய்திகள் / நல்லூரில் ஆரம்பித்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணி ..

நல்லூரில் ஆரம்பித்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணி ..

எழுக தமிழ் எழுச்சிப் பேரணியின் ஒரு பகுதி நல்லூர் ஆலய முன்றலிலிருந்து இன்று முற்பகல் 10.25 மணியளவில் ஆரம்பமானது.

தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்து, எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கசார்பற்ற சர்வதேச விசாரணையை நடத்து, தமிழ்ப் பகுதிகளில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, போரினால் இடம்பெயர்ந்த அனைவரையும் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து ஆகிய ஆறு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்த எழுக தமிழ் பேரணி நடத்தப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இருந்தும், யாழ். பல்கலைக்கழக வாயிலில் இருந்தும், ஆரம்பிக்கும் பேரணி யாழ். கோட்டை அருகேயுள்ள முற்றவெளி திடலில் முடிவடையும்.

அங்கு எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அத்துடன் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் உரையாற்றவுள்ளனர்.

எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வடக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com