நல்லூரிலும் ஈபிடிபியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி !!

நல்லூர் பிரதேச சபையை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

20 உறுப்பினர்களைக் கொண்ட நல்லூர் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தேர்வு இன்று (04) புதன்கிழமை காலை 09 மணியளவில் நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

தவிசாளர் தேர்விற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாமோதரம்பிள்ளை தியாகமூர்த்தியையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திருமதி வாசுகி சுதாகரனையும் பிரேரித்தது.

தசிசாளர் தேர்வு பகிரங்கமாகவாக இரகசியமாகவா நடத்தப்படவேண்டும் என உறுப்பினர்களிடம் கோரப்பட்டபோது பகிரங்க வாக்கெடுப்பாக நடத்தப்படவேண்டும் என 11 உறுப்பினர்களும் இரகசிய வாக்கெடுப்பாக நடத்தப்படவேண்டும் என 8 உறுப்பினர்களும் குறிப்பிட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் நடுநிலை வாகிப்பதாக குறிப்பிட்டார்.

இந்நிலையிலி் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களும் ஈபிடிபியின் 04 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 01 மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினருமாக 12 உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான தாமோதரம்பிள்ளை தியாகமூர்த்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 05 உறுப்பினர்கள் மற்றும் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டிருந்த சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் இருவருமாக 07 உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரேரித்திருந்த திருமதி வாசுகி சுதாரகரனுக்கு வாக்களித்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினரான தெ.கிரிதரன் நடுநிலை வகித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான இராசமனோகரன் ஜெயகரன் உப தவிசாளராகத் தெரிவானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com