நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி நல்ல ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் – ஜே.வி.பி

image-0-02-01-c09067c99553ac50feec16b0e7b872993f5279345182ad99a9fccd519b1b61a1-Vகிராமம் ஒன்றில் மக்களால் ஏற்படுத்தப்படும் சபையில் முக்கியஸ்தர்களான தலைமைகள் ஊழல் நடவடிக்கையில் ஈடுப்பட்டால் அவர்களை ஊரை வீட்டு வெளியேற்றும் கிராமவாசிகள் மக்களின் உழைப்பினால் கொண்டு நடத்தப்படும் அரசாங்கத்தில் திறைசேரியில் ஊழல்கள் இடம்பெற்றால் மக்கள் அரசாங்கத்தை வெளியேற்ற வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

மக்கள் மீதான கடன் சுமை, வரிச்சுமை மற்றும் வீழ்ச்சியடையும் பொருளாதாரம் ஜே.வி.பியின் மக்கள் சந்திப்பு 28.08.2016 அன்று ஹங்குராங்கெத்த பதியப்பெலல்ல அங்கிலியப்பெட்டிய மற்றும் கொத்மலை மெதகந்த, கும்பால்ஒளுவ ஆகிய மூன்று கிராம பகுதிகளில் இடம்பெற்றது.

இதன்போது ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு போன்றே மைத்திரிபால மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கமும் மக்கள் மீது வரி சுமையை தாக்கி அவர்களின் கழுத்தை நெரித்துள்ளது. ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடியை மக்கள் மீது திணிப்பதையே தமது கடமையென இந்த ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர்.

பச்சை நிறத்தாலும், நீல நிறத்தாலும் வரலாற்றில் பெற்றுக்கொண்ட சகல கடன்களையும் நிற பேதமின்றி இன பேதமின்றி மக்கள் செலுத்த வேண்டும் என இவர்கள் நினைக்கின்றனர். அவ்வாறே கூட்டு அரசாங்கமும் இன்று அதை நியாயப்படுத்தி இருப்பது சரியா ?

நாட்டை கடனாளியாக்கியிருப்பது மக்களா ? என்ற கேள்வி இன்று பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. கூட்டு அரசாங்கம் மக்கள் மத்தியில் வரி அறவிடுவதை நியாயப்படுத்துவதற்காக காட்டுவது கடந்த ஆட்சியின் ஊழல் மோசடி காரணமாக நாட்டை கடனாளியாகிருப்பதாகவும் அரசாங்கம் இந்த பாரிய கடன் மலையை தனியாக தாங்கி கொள்ள முடியாததால் மக்களுக்கு பகிர்ந்தளித்திருப்பதாகவே கூறுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டின் பழைய கடன் சுமையினை வரியாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் போது ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் கடன் வாங்குகின்றனர்.

நாட்டை கடனாளியாக்கிய ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் கூடுதலான கடன் வாங்கியது பற்றி இன்று பேசுகின்றனர். இருந்தும் கூட்டு ஆட்சி மஹிந்த ராஜபக்ஷவினால் கடன் பெற முடியாது போன் நாடுகளிலும் நாணைய நிதியத்திலும் தமக்கு கிடைக்கும் கடனை பற்றியும் பேசிக் கொள்கின்றனர்.

ஆனால் வாங்கப்படும் கடன் பின் செலுத்த வேண்டியதும், அனைத்து சாதாரண மக்களாகும் என்பதை இவர்கள் உணர்கின்றார்களா ?

அதேவேளை அரசாங்கத்தின் கடன் பழுவினை செலுத்துவதற்கு மக்கள் மீது வரிகளை ஏற்றும் அரசாங்கம் கடன் சுமையின் பங்காளிகளாக ஆவது எப்படி எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தற்போதைய ஆட்சியாளர்களும் ராஜபக்ஷ ஆட்சியை போன்றே கடன் மீதும் வரி மீதும் நம்பிக்கை வைத்துள்ளமை தெரிகின்றது. பொது மக்களின் வாழ்க்கையை இதன் 5லம் அழித்தொழிக்கின்ற ஆட்சியை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

அரசாங்கத்தின் வயிற்று பிழப்புக்காக மக்கள் மீது வரி சுமையை ஏற்றுவதற்கு எதிராக நாம் அணிதிரள்ள வேண்டும் என இதன்போது அவர் கேட்டுக்கொண்டார்.

கடன் சுமையை மக்கள் மீது திணித்துள்ள அரசாங்கம் கிராமத்தின் பாடசாலைக்கு உதவுவதில்லை. மாறாக பாடசாலை அபிவிருத்தியை முன்னெடுத்து செல்ல பாடசாலை நிர்வாகம் மக்களிடமே பணத்தை பெறுகின்றது.

கிராம வைத்தியசாலைகளுக்கு அரசாங்கம் உதவி செய்வதில்லை. மாறாக மருந்துகளை வெளியில் வாங்க மக்களின் பணத்தை செலவழிக்கவே மருந்து பற்றுச்சீட்டு வழங்கப்படுகின்றத.

இது போன்று பல விதமான மக்கள் சுமையை அரசு புகுத்துகின்றது. எவ்.சீ.ஐ.டீ மூலமான விசாரணைகள் ஊழல் தொடர்பில் முன்னெடுக்ப்படுகின்றது.

இருந்தும் கொள்ளையடித்து மக்களின் உழைப்பை சுரண்டி நடத்திய அரசாங்கத்தை எவ்வாறு வீட்டுக்கு அனுப்பியினார்களோ இவ்வாறு நடந்து கொண்டிருக்கின்ற அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்பி நல்ல ஒரு அரசாங்கத்தை ஜே.வீ.பீ. மூலமாக எதிர்காலத்தில் அமைக்க மக்கள் சக்தி ஒன்றாக வேண்டும் என அவர் தனது உரையில் தெரிவித்தார்.image-0-02-01-6c809ee9f207362a6841cbb4adea7ebff9374fc87b2e4b7f93f3e3fda546b0d8-V
image-0-02-01-fb533a424b5a6b6aa61055e28e7db3673f24b8d50849180810464d3ed28b8c9b-Vnalinda

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com