நல்லாட்சியிலும் மக்கள் துன்பத்தில் – அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

ஒரு வருட நல்லாட்சி நிலவுகின்ற போதும் எமது மக்கள் மீளக் குடியமரத்தப்படாத நிலையில் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மீனவர் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், 
அங்கு மேலும் தெரிவித்த அவர்,
எமது மீனவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தினால் மட்டுமே அவர்களது குறைகள் நீங்கும் எனவும் குறிப்பாக மைலிட்டி மக்களை துரிதமாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த வேண்டும் எனவும் தெரிவித்த அவர் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்ற எங்கள் மீனவர்கள் விடுவிக்கப்படுவதிலை ஆனால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டால் உடனடியாகவே விடுவிக்கப்பட்டுவிடுவார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds