நல்லதண்ணி – லக்ஷபான தோட்ட குடியிருப்பில் தீ

நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட நல்லதண்ணி – லக்ஷபான தோட்ட குடியிருப்பில்  06.08.2016 அன்று இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த வீடுகளில் குடியிருந்த 02 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் தற்காலிகமாக ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை எனவும், எனினும் அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை இது தொடர்பாக நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய விசாரணகளை மேலதிக மேற்கொண்டு வருகின்றனர்.DSC07831 DSC07837 DSC07838 DSC07839 DSC07847 DSC07850 DSC07855 DSC07858 DSC07859 DSC07861

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com