நல்லதண்ணியில் இடைக்கால கொடுப்பனவுக்கான ஒப்பந்தத்தின் பிரதிகளை எரித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமனெ கோரி, நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எமில்டன், லக்ஷபான, சென்.அன்றூஸ், வாழமலை ஆகிய தோட்டங்களை சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 28.09.2016 அன்று காலை லக்ஷபான தோட்ட தொழிற்சாலைக்கு முன்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது முதலாளிமார் சம்மேளனமும், குறித்த சில தொழிற்சங்கங்களும் செய்து கொண்ட இடைக்கால கொடுப்பனவுக்கான ஒப்பந்தத்தின் பிரதிகளை மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் இவ்வாறான மோசடியான கைச்சாத்திட்ட ஒப்பந்தம் தொழிலாளர்களை குழி தோண்டி புதைத்தது என கோரி ஒப்பந்தத்தினை எரித்து சாம்பலாக்கினர்.

சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.dsc08628 dsc08629 dsc08634 dsc08638

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds