நல்­லூர் திரு­வி­ழாவில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்குகள்!

நல்­லூர் கந்­த­சு­வாமி ஆலய வருடாந் தத் திருவிழா நாளை வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­றது. திருவிழாக் காலங்க ளில் ஆலயத்துக்கு வரும் அடி­ய­வர்­க­ளின் நலன் கருதி யாழ்ப்­பாண மாந­க­ர­ச­பை­யி­ன் சுகா­தா­ரப் பிரி­வி­னர் பின்­வ­ரும் அறிவுறுத்தல்க ளைப் பின்­பற்­று­ மாறு கோரி­யுள்­ள­னர்.

உற்­ச­வ­கா­லத்­தில் கோயில் சுற்­றா­ட­ லி­லும் கோயி­லுக்கு வரும் பாதை­க­ளி­லும் தாங்­கள் உள்­ளெ­டுக்­கக்­கூ­டிய குடி­தண்­ணீர் மற்­றும் உண­வுப்­பொ­ருள்­கள் சுகா­தா­ர­மா­னது என்­பதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­வ­தோடு அது தொடர்­பில் முறைப்­பா­டு­களை 021 222 2645 எனும்  தொலை­பேசி இலக்­கத்­துக்கு அல்­லது நல்­லூர் பிர­தேச பொது சுகா­தார பரி­சோ­த­க­ரின் அலை­பேசி இலக்­க­மான  071 862 85 19 இலக்­கத்­துக்­குத் தெரி­வி­யுங்­கள்.

குழந்­தை­கள், சிறு­வர்­கள் விரும்பி உண்­ணும் சிற்­றுண்­டி­கள் சுகா­தா­ர­ மற்ற முறை­யில் தயா­ரிக்­கப்­பட்­டால் அல்­லது விநி­யோ­கிக்­கப்­பட்­டால் அவற்றை வாங்­கிக் கொடுப்­ப­தைத் தவிர்ப்­ப­தோடு குறித்த தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு உட­ன­டி­யா­கத் தெரி­யப்­ப­டுத்­த­வும்.

அதி­க­ள­வான சீனி (சிவப்பு, செம்­மஞ்­சள் ஸ்ரிக்­கர் ஒட்­டப்­பட்ட குடி­பா­னங்­கள்) நிற­மூட்­டி­கள், சுவை­யூட்­டி­கள் சேர்க்­கப்­பட்ட ஆரோக்­கி­யத்­தைக் கெடுக்­கும் உண­வு­களை இயன்­ற­ள­வில் தவிர்த்­துக் கொள்­ளுங்­கள்.

சாலை­யில் பரப்­பப்­பட்­டி­ருக்­கும் மண்­ணில் சுகா­தா­ரத்­தைப் பேணும் வகை­யில் ஆலய சுற்­றா­ட­லில் உள்ள குடியி ருப்பாளர்கள் தங்­கள் வளர்ப்பு நாய்­கள் சாலைக்கு வராது பார்த்­துக் கொள்­ளுங்­கள்.

கோயி­லுக்கு வரும் அடி­யார்­கள் தம்­மு­டன் தமது  வளர்ப்பு நாய்­க­ளைக் கூட்டி வரு­வதை தவிர்த்­துக் கொள்­ளுங்­கள். மீறும் பட்­சத்­தில் அவை கட்­டாக்­காலி நாய்­க­ளாக கரு­தப்­பட்டு அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­டும் அல்­லது நாய்­கள் பதி­வுக் கட்­ட­ளைச் சட்­டத்­தின் பிர­கா­ரம் சட்­ட­ந­ட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டும்.

குடி­யி­ருப் பா­ளர்­கள் தங்­கள் வளர்ப்பு நாய்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் பூச்சி மருந்தை நாய்­கள்  உட்­கொள்­வ­தை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ளு­மா­றும் வேண்­டப்­ப­டு­கி­றீர்­கள்.

ஆல­யச் சுற்­றா­ட­லுக்­குப் பிளாஸ்­ரிக், பொலித்­தீன் மற்­றும்  ரெஜி­போம் பொருள்­களை எடுத்து வரு­தல், அவற்­றில் உணவு பொதி­யி­டு­தல் என்­பன முற்­றாக தடை­செய்­யப்­பட்­டுள்­ளது. அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு பொது மக்­கள் அன்­பு­டன் கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

அங்­கப்­பி­ர­தட்­ச­ணம் மற்­றும் அடி­ய­ழித்­தல் போன்ற நேர்த்­திக் கடன்­கனை நிறை­வேற்­றும் அடி­ய­வர்­க­ளின் நன்­மை­க­ரு­தி­யும் மண்­ணின் சுகா­தா­ரத் தைப் பேணு­மு­க­மா­க­வும் ஆல­யச்­சுற்­றா­ட­லில் (உள்­வீ­தித்­த­டைக்­குள்)  பாத­ணி­கள் அணிந்து செல்­வதை முற்­றாக தவிர்க்­கு­மா­றும் ஆலய வீதி­க­ளில் பரப்­பப்­பட்­டுள்ள மண­லின் மீதி­ருந்து உண­வுப்­பொ­ருள்­கள் உண்­ப­தைத் தவிர்த்­துக் கொள்­ளு­மா­றும் (கச்­சான் கோது போடு­தல், கார உணவு மீதி­கள் படிந்த ரெஜி­போம் மற்­றும் பேப்­பர் பாக் போடு­தல் போன்­ற­வற்றை தவிர்த்­தல்) கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

ஆல­யச்­சூ­ழ­லில் நட­மா­டும் பொது­மக்­கள் கழி­வுப் பொருள்­களை வீச வேண்­டிய சந்­தர்ப்­பங்­க­ளில் அவற்­றைத் தரம்­பி­ரித்து அதற்­கென வைக்­கப்­பட்­டுள்ள கழி­வுக்­கூ­டை­க­ளில் போட­வும்.

ஆலய சுற்­றா­ட­லில் தற்­கா­லிக வியா­பார நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­டும் பட்­சத்­தில்  அவற்­றில் ஒலி­பெ­ருக்­கி­களை ச் சத்­த­மாக அல­ற­வி­டு­வ­தோ திரைப்­ப­டப் பாடல்­கள் இசைப்­ப­தோ தவிர்த்து ஒத்­து­ழைப்பு நல்­க­வேண்­டும்.

வீடு­க­ளில் குறித்த தினங்­க­ளில் மட்­டும் தண்­ணீர்ப்­பந்­தல் மற்­றும் அன்­ன­தான நிகழ்­வு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­மா­றும் மீறும் பட்­சத்­தில் சட்­ட­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்ள நேரி­ட­லாம் என்­ப­தை­யும் தெரி­வித்­துக் கொள்­கின்­றோம்.

பொது மக்­கள் தங்­கள் வீடு­க­ளில் டெங்கு நுளம்­பு­கள் பெரு­கா­த­வாறு சுற்­றா­ட­லைப் பேணு­வ­து­டன் தங்­கள் வீட்­டுக்­குத் திரு­வி­ழாவை முன்­னிட்டு பிற­மா­வட்­டங்­க­ளில் இருந்து  வருகை தரும் விருந்­தி­னர்­கள் காய்ச்­ச­லு­டன் வரும் பட்­சத்­தில் உரிய மேல­திக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதை (காய்­ச் ச­லுக்கு உட்­பட்­ட­வரை மருத்­துவ பரி­சோ­தனை உட்படுத்தல் நுளம்பு வலை­களை உப­யோ­கிக்க வைத்தல், நுளம்புக்  கடி­யில் இருந்து பாது­காத்­தல்) உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ளு­மா­றும் கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கின்­றீர்­கள்.

ஆல­யச்­சுற்­றா­ட­லி­லும் மாந­க­ர­சபை எல்­லைக்­குள் வதி­யும் பொது மக்­கள் தமது வீட்­டுக்­க­ழி­வு­களை வீதி­க­ளில் வீசி கோவி­லுக்கு வரும் பக்­தர்­க­ளுக்கு அசௌ­க­ரி­யங்­களை ஏற்­ப­டுத்­தாது சுற்­றுப்­பு­றச்­சூ­ழல் சுகா­தா­ரம் பேண ஒத்­து­ழைக்­கு­மா­றும் வேண்­டிக் கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

கோவி­லுக்கு அண்­மித்த சூழ­லில் வதி­யும் பொது மக்­கள் தங்­கள் வீட்­டுக் கிண­று­களை இறைத்­தும் நீர்த்­தாங்­கி­ க­ளைச் சுத்­தம் செய்­தும் கிணற்றுக்கு  வாராந்­தம் குளோ­ரின் இடு­வ­தற்கு சுகா­தார பகு­தி­யி­ன­ரின் உத­வி­யைப் பெற்­றுக்­கொள்­ளுங்­கள்.

அன்­ன­தான மடங்­கள், தண்­ணீர் பந்­தல் நடத்­து­வோர் பின்­பற்ற வேண்­டிய சுகா­தார நடை

­மு­றை­கள்

தாங்­கள் பொது மக்­க­ளுக்கு வழங்­கும் உண­வுப் பதார்த்­தங்­கள் குடி­பா­னங்­கள் சுத்­த­மா­னவை என்­பதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­வது தங்­க­ளது தலை­யாய கடமை.

தங்­கள் வளா­கத்­தி­லுள்ள கிண­று­க­ளைத் திரு­விழா தொடங்க முன்பு  இறைத்து தண்­ணீர்த்­தாங்­கி­களை கழு­விச் சுத்­தம் செய்­வ­தோடு அவற்­றுக்­குக் குறைந்­தது வாரந்­தோ­றும் குளோ­ரி­னேற்­றம் செய்­வதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ள­வும்.

உணவு கையாள்­வோ­ரும் குடி­பா­னங்­கள் வழங்­கு­வோ­ரும் தொற்று நோய்­க­ளுக்கு ஆளா­கா­மல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­தும் முக­மாக தற்­கா­லிக மருத்­துவ சான்­றி­தழை யாழ். மாந­க­ர­ச­பை­யின் சுகா­தார மருத்துவ அதி­கார பணி­ம­னை­யில் பெற்­றி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ள­வும்.

உணவு மற்­றும் குடி­பா­னங்­க­ளுக்கு சேர்க்­கப்­ப­டும் நிற­மூட்­டி­கள் தர­மா­னவை என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் படி­யும், இது தொடர்­பில் மேல­திக விளக்­கங்­கள் தேவைப்­ப­டின் சுகா­தார மருத்துவ அதி­காரி பணி­ம­னை­யில் பெற்­றுக் கொள்­ள­லாம்.

குடி­தண்­ணீர் தேவைக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டும் நீரா­னது தர­மா­ன­தாக இருப்­பதை உறு­திப்­ப­டுத்­தும் பொருட்டு தரச்­சான்­றி­தழ் பெறப்­பட்­ட­தாக இருத்­தல் வேண்­டும். அல்­லது மாந­க­ர­ச­பை­யால் வழங்­கப்­ப­டும் குடி­தண்­ணீ­ராக இருத்­தல் வேண்­டும்.

பிளாஸ்­ரிக் பொலித்­தீன் (லஞ்­சீற், ஒரு­நாள் கப் , பிளாஸ்­ரிக் போத்­தல்­கள்) பாவ­னை­களை முற்­றா­கத் தவிர்த்­துக் கொள்­ள­வும். இவை நல்­லூர் ஆலய சூழ­லில் தடை செய்­யப்­பட்­டுள்­ளன.

கழி­வு­க­ளைத் தரம்­பி­ரித்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ள­வும்.தங்­க­ளது கழிவு நீரின் தேக்­கத்தால் இலை­யான் நுளம்பு போன்­றவை பெரு­கா­தி­ருக்க உரிய முறை­யில் கிடங்­கு­க­ ளில் கழி­வு­நீ­ரைச் சேமித்­துக் குறித்த தவணை இடை­வே­ளை­க­ளில் தகுந்த முறை­யில் அப்­பு­றப்­ப­டுத்தி சுற்­றா­டல் சுகா­தா­ரத்தை பேண­வும்.

எந்த நேரத்­தி­லும் மேற்­கு­றித்த நடை­மு­றை­கள் பேணப்­ப­டா­த­வி­டத்து அல்­லது சுகா­தார நடை­மு­றை­கள் பின்­பற்­றப்­ப­டா­த­வி­டத்து தங்­கள் சேவை இடை­நி­றுத்­தப்­ப­டு­வ­தோடு சட்­ட­ந­ட­வ­டிக்­கை­யும் எடுக்க நேரி­ட­லாம் – என்­றுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com