நயினாதீவு கடலில் மூழ்கி கோண்டாவில் இளைஞர்கள் மூவர் உயிரிழப்பு

seaநயினாதீவு நாகபுசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழாவிற்குச் சென்ற கோண்டாவிலைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கருடன் பாம்பு கற்களைவழிபடச் சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு  நாராயணன் கோவிலடியை சேர்ந்த எட்டு இளைஞர்கள் இன்றைய தினம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழாவுக்குச் சென்றுள்ளனர்.

தேர்த்திருவிழா முடிவுற்ற பின்னர் நயினாதீவு அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பினுள் காணப்படும் கருடன் பாம்பு கற்களை வழிபட சென்ற அவர்கள் அப்பகுதியில் உள்ள கடற்பரப்பில் நீராடியுள்ளனர்.

நீராடிமுடிந்தபின் அவர்கள் கரை திரும்பியபோது தம்மில் மூவர் கரைதிரும்பாததையடுத்து அவர்களைத் தேடியபோது  கடலில் மூழ்கி அவர்கள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.  இச்சம்பவத்தில் கோண்டாவில் கிழக்கு நாராயணன் கோவிலடி மற்றும் வைத்தியசாலை வீதியை சேர்ந்த தேவராஜா சாருஜன் (23 வயது) தேவராஜா சஞ்சயன் (22வயது) மற்றும் உதயகுமார் பகிரதன் (21வயது) ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். உயிரிழந்த மூவரில் இருவர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com