சற்று முன்
Home / சினிமா / நயன்தாரா கன்னத்தில் பளார் என அறைவாரா சிவகார்த்திகேயன்?

நயன்தாரா கன்னத்தில் பளார் என அறைவாரா சிவகார்த்திகேயன்?

வடை செய்வதைவிட தயிர்வடை செய்வது எளிது என்பதை நடிகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வடை செய்ய தானியத்தை ஊறவைத்து பக்குவமாக அரைத்து எண்ணையில் சுட்டு எடுக்க வேண்டும். கஷ்டம். தயிர்வடை என்றால் யாராவது சுட்டு வைத்த வடையில் தயிர் மட்டும் ஊற்றினால் போதும், தயிர்வடை தயார். ரஜினி மாதிரி ஆவதற்கு தனியாக ஸ்டைல் கிரியேட் செய்வதற்கு பதில் ரஜினியையே இமிடேட் செய்தால் போதாது?

சிவகார்த்திகேயன் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். ரஜினியை இமிடேட் செய்வது. இப்போது அவரது படங்களிலும் கைவைக்கவிருப்பதாக தகவல்.

ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிக்கிறார் அல்லவா, அந்தப் படம் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த மன்னன் படத்தின் மேலோட்டமான தழுவல் என தகவல் வெளியாகியுள்ளது. உறுதியில்லை, வதந்திதான், ஆனாலும் ஒரு விஷயம் இடிக்கிறது.

சிவகார்த்திகேயன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச உள்ளனர். மன்னனில் விஜயசாந்தி நடித்த வேடம். அதில் விஜயசாந்திக்கு ரஜினி கன்னத்தில் பளார் விடுவார். சிவகார்த்திகேயனால் நயன்தாரா கன்னத்தில் பளார்விட முடியுமா? நயன்தாரா அனுமதிப்பாரா?

வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனை கட்டியே பிடிக்கவிடாமல் எட்டி நின்றவர் நயன்தாரா. ம்… யோசிக்க வேண்டிய விஷயம்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com