நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

கடும் பரபரப்புக்கு இடையே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 122 எம்.எல்.ஏக்கள் வாக்களித்து இருப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்துள்ளனர். இதனால், முதல்வராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட தி.மு.க எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com