நண்பனாக அருகிலிருப்போம் – மோடி உரை

இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்காளராகவும் நண்பராகவும் இந்தியா எப்பொழுதும் அருகில் இருக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்றுவரும் வெசாக் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு “என்னுடைய தமிழ் சகோதரர்கள்´ பயணிப்பதற்கு இலகுவாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதேவேளை ஹற்றன் நோர்வூட்டில் வைத்தியசாலை திறப்புவிழாவின் பின் மைதானத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றிய மோடி மலையகத்துக்கு, மேலும் 10 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார். தமிழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இந்த மண்ணில் பிறந்தவர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனைக்கூட எமக்கு பரிசளித்துள்ளீர்கள் என்றார்.

தற்போது மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் நடைமுறையில் உள்ள 1990 அவசர அம்பியூலன்ஸ் ​​அவசர சேவையை ஏனைய மாகாணங்களுக்கும் விரிவு படுத்துவதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com