நட்சத்திர ஆமைகளை எடுத்து சென்றவர் கைது

அரியவாழ் உயிரினமான நட்சத்திர கடலாமைகளை எடுத்து சென்ற   நபரை நேற்று  (02) காலை மாதகல்   சிவன் கோயில் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஆர்.சேனநாயக்க தெரிவித்தார்.
கைதான நபரிடம் இருந்து 10கிலோகிராம் நிறையளவில் ஒரு ஆமையும் 12கிலோகிராம் நிறை கொண்ட அளவில் மற்றுமொரு  ஒரு ஆமையுமாக இரண்டு ஆமைகளை எடுத்து சென்றுள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கபெற்ற இரகசிய தகவலிற்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் சுழிபுரம் பாண்டாவத்தை பகுதியினை சேர்ந்த 46வயதுடைய நபர் எனவும் இந்த   நபரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com