நடு வீதியில் அரச ஊழியருக்கு கொலை மிரட்டல் – வேடிக்கை பார்த்த பொலிஸ் அதிகாரி – பிக்கு என்னதான் பேசினார் ?

pikuபட்டிப்பளை தமிழ் எல்லை பகுதியை அம்பாறையுடன் இணைத்து சிங்கள குடியேற்றத்தை அமைக்கவேண்டும் என்று வெள்ளிக்கிழமை (11)  மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அங்கு நின்ற தமிழ் கிராமசேவையாளரை மிக மோசமான தூசன வார்த்தைகளால் ஏசியுள்ளார். அங்கு கடமையில் நின்ற பொலிசார் சம்வங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமை மக்களி மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மங்களராமய விகாராதிபதி பேசிய வார்த்தைகளின் மொழிபெயர்ப்பு சில தணிக்கைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.

வில்பத்துல வெட்டுறாங்கள். அங்க போய் வழக்கு போடுடா..
ஸ்ரீபாதல வெட்டுறாங்கள் அங்க போங்கோடா.. போங்கோ..
……………………(சாதி பெயர்)
நீ புலிடா…
புலிடா…
நீ புலியே தான்ரா…
சிங்களவன அண்டைக்கு சுட்ட…
இண்டைக்க அடிக்கிற
நீ அதைத் தான்ரா செய்யிற…
உன்னைப் பாக்கும்போது எரிச்சல் வருது..
இந்த நாய்தான் தொடர்ந்து வழக்கு போட்டது…
நீ கிராம சேவகர் எண்டத நினைச்சிக்கொள்…
நீ தமிழன்…
நீ சிங்களவனுக்கு எதிரா தொடர்ந்து வழக்கு போடுறத நிப்பாட்டு..
உனக்கு நல்லபடியா சொல்றன்…
ஒரு சிங்களவனையும்
ஒரு இடத்திலயிருந்து அசைச்சாலும் ……….
தம்பிய நீதிமன்றமும் முடிந்துவிட்டது. (முஸ்லிம் நீதிமன்றம்)
தமிழனின் நீதிமன்றமும் முடியும்…
நீ நல்லா நினைவு வச்சிக்கொள்…
உன்ர தாடைய இப்ப அடிச்சி நொருக்கிடுவேன்…
நான் பொறுமையா இருக்கிறன்
ஏன் எண்டா இந்தக் காக்கிச்சட்டைக்காகத்தான்.
அதை நீ நினைவு வச்சிக்கொள்
……………………..(சாதி பெயர்) ……….தமிழா…
இவனுக்கும் சொல்லனும் (பொலிஸ்க்கு )……..
(கிராம சேவையாளருக்கு) நீ சிங்களவன் எட்டுப் பேருக்கு எதிரா வழக்குப் போட்ட
ஏன் உன்ர அப்பாவின்ர இடமா? அம்மாவின்ர இடமா?…
டேய் அப்பாவிகளுக்கு இப்பிடி செய்யாத…
நீ புலியாகி சுட்ட….
நாங்க பொறுமையா இருந்தோம்….
பு….(கெட்டவார்த்தை)
திரும்பியும் கைவைக்க வெளிக்கிட்டால் எந்தவொரு பு…மகனுக்கும் (கெட்டவார்த்தை) நான் சொல்றன் நல்லா தெரிஞ்சிக்கொள் கடைசி காலம்தான்
அம்மா ஓ….(கெட்டவார்த்தை)
உங்களுக்கு….அடிப்பேண்டா…ம்ம்ம்….இவன் சாகும் வரைக்கும்….!

————————————————————————

தமிழ் மக்கள் அனைவரையும் விடுதலைப் புலிகள் என அடையாளப்படுத்தியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தகாத வார்த்தைகளால், கெவிலியாமடு கிராமசேவகர் உட்பட அதிகாரிகளை திட்டித்தீர்த்துள்ளதுடன், அச்சுறுத்தலும் விடுத்திருக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவின் கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை கையகப்படுத்தி சிங்கள மக்களை குடிமயர்த்த மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்தே, கிராமசேவகருக்கு மங்களாராம விகாரையின் தலைமை பௌத்த பிக்கு, கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார்.

பொலிசார் முன்னிலையில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, வெல்லாவெளி போன்ற பிரதேசங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போருக்காக, சுமார் 2ஆயிரத்து ஐநூறு முதல் மூவாயிரம் ஏக்கர் மேய்ச்சல் நிலம், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல தசாப்த காலமாக மேய்ச்சல் நிலமாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள இந்த காணிக்குள் அத்துமீறி நுழைந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள குடும்பங்கள், தற்போது குறித்த காணிகளை தமக்கு எழுதிக்கொடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள குடும்பங்களுக்கு குறித்த காணிகளை பகிரந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான 4 பிக்குகள் தலைமையிலான குழுவினரின் நடவடிக்கையை குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவகர் தலைமையிலான அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, கெவிலியாமடு கிராமசேவகரைத் திட்டித் தீர்த்தது மாத்திரன்றி எச்சரிக்கையும் விடுத்தார்.

அதேவேளை தமிழர்கள் அனைவரையும் புலிகள் என அடையாளப்படுத்திய சுமனரத்தன தேரர், காணியை வழங்க மறுக்கும் கிராமசேவகரைப் பார்த்து, எனது, அப்பனது, தாயினது காணியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மங்களாராம விகாரையின் தலைமை பிக்கு இந்த அடாவடித்தனத்தை, பொலிசாருக்கு முன்னிலேயே அரங்கேற்றியிரந்தார். இதனை தடுக்க முடியாது திணறிய பொலிசார், கெஞ்சி, கூத்தாடியே பௌத்த பிக்குவை அங்கிருந்து அகற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com