நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் – 5 பேர் காயம்

(26.07.2015) கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், மீன் பிடித்தலை பாதியில் நிறுத்திக் கொண்டு இரவோடு இரவாக மீனவர்கள் கரைத் திரும்பியுள்ளனர்.
ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள், கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களை மீன்பிடிக்கவிடாமல் அச்சுறுத்தியதோடு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் பல முறை சுட்டதாக, கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
கரையை நோக்கி திரும்பிய போது, தங்களை கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் கூறினர். இலங்கை கடற்படை தாக்குதலில் 5 பேர் காயமடைந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com