த.தே.ம.முன்னணியின் தொழிலாளர் தின பேரணியும், பொதுக்கூட்டமும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு 01.05.2017 (திங்கட்கிழமை) சாவகச்சேரியிலுள்ள வார்வனநாதர் சிவன் கோவில் முன்றலில் இடம்பெறவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக மோட்டர் சைக்கிள் ஊர்திப் பேரணியானது கைதடிச் சந்தியிலிருந்து பி.ப 2.00 மணிக்கு ஆரம்பமாகி ஏ9 வீதி வழியாக சாகச்சேரி பேருந்து தரிப்பிடத்தை சென்றடையும்அங்கு கூடி நிற்கும் பொது மக்களுடன் இணைந்து பொதுவான எழுச்சிப் பேரணியானது பி.ப3.00 மணிக்கு சாவகச்சேரி பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு சாவகச்சேரி புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள வாரிவனநாதர் சிவன்கோவிலை நோக்கிச் செல்லும். சிவன் கோவில் முன்றலை பேரணி அடைந்ததும் பி.ப 3.30 மணிக்கு பொதுக்கூட்டம் ஆரம்பமாகும்.

• அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படல் வேண்டும்.
• காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி கண்டறியவும், இனவழிப்பு, போர்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும்.
• தமிழர் தாயகத்திலிருந்து ஸ்ரீலங்கா இனவழிப்பு இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும்.
• இடம்பெயர்ந்து வாழும் மக்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர உடனடியாக அனுமதிப்படல் வேண்டும்.
• வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும்.
• தென்னிலங்கை மீனவர்கள் தமிழர் தாயக கடற்பரப்பினுள் நுழைந்து அத்துமீறிய மீன்பிடிபியில் ஈடுபடுவது தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
• தமிழர் தாயக கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடிமுறைகள் தடை செய்யப்படல் வேண்டும்.
• வறட்சியினாலும் வெள்ள அனர்தங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்படல் வேண்டும்.
• யுத்தத்தினால் அங்கங்களை இழந்தவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படல் வேண்டும்.
• முன்னாள் போராளிகளையும், போரால் பாதிக்கப்பட்ட மக்களையும் பொருளாதார ரீதியாக முன்னேற்ற உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
• தமிழர் தாயகத்தை திட்டமி;ட்ட ரீதியில் சிங்கள பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
• தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஒற்றையாட்சி அரசியலமைபின் கீழான எந்தவொரு தீர்வையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
• இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில், சுயநிர்ணய உரிமையின் பிரகாரம், தமிழத்;; தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்டு இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையிலான தீர்வு அடையப்படல் வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலையை வென்றெடுக்கவும், தமிழ்த் தேசத்து தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அனைத்து தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாய் குரல் கொடுப்போம். இலட்சியத்தின் கீழ் அனைவரும் ஒற்றுமையாய் ஓரணியில் திரள்வோம். அணிதிரண்டு வாரீர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com