தோழனே உன் பேனாவின் எழுத்துக்களிற்குப் பதிலளிக்க முடியாதவர்கள் தங்கள் துப்பாக்கிகளின் சன்னங்களால் உன்னை வீழ்த்திச்சென்றனரே …!

13900284_10206618894300586_2184678990845903492_nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன் 01.08.2007 அதிகாலை 5 மணியளவில் அவனது வீட்டில் பெற்றோரின் முன்னிலையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டான்.

நிலக்சனின் 9 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
———————————————————————

நிலா….

பாதிவழியில் எம்மை
தவிக்கவிட்டு
மறைந்திருப்பாய் எனத் தெரிந்திருந்தால்
நிலா என்று உன்னை
அழைக்காது விட்டிருப்போமே

1395260_10202523734563045_989830458_n

இது இருக்கிறம் வார சஞ்சிகை்காக 2011 ஆம் ஆண்டு கலியுகனால் எழுதப்பட்ட நிலாவின் நினைவுக் குறிப்பின் இறுதிப்பகுதிகள் இவ்வாறு அமைந்திருந்தன.

 

யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லுதல் என்பது அன்றைய நாட்களில் இனந்தெரியாத ஆயுததாரிகளின் அன்றாட நடவடிக்கையாக இருந்ததால் நான் அலுவலகம் சென்றுவிட்டேன். அது அவன் தான் என அன்று இரவு பி.பி.சி கேட்கும்வரை நான் அறிந்திருக்கவில்லை. அவனது இறுதி ஊர்வலத்திற்கு யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்பதை அறிய புலனாய்வாளர்களை குவிக்க காட்டிய அக்கறையை அவனது மணரத்திற்கு காரணமாணவர்களை கண்டறியவோ கைதுசெய்யவோ சட்டத்தின்முன் நிறுத்தவோ எவரும் அக்கறை காட்டவில்லை.   நிலா கொல்லப்பட்டு இன்றோடு நான்கு (ஒன்பது) வருடங்கள் முடிந்துவிட்டது. நிலாவின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. நிலா மட்டுமல்ல இன்று வரை நிலா உட்பட இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணைகள் எதுவுமே முற்றுப்பெறவில்லை. அச்சுறுத்தல்கள் காரணமாக இன்றுவரை வெளிநாடுகளுக்கு புகலிடம்தேடி ஓடும் ஊடகவியலாளர்கள் பட்டியல் நிண்டகொண்டுதான் இருக்கிறது.  ஆனால் இந்த விடையங்களில் ஊடக அமைப்புக்களும் சர்வதேச ஊடகம்சார் மற்றும் சாராத ஐ.நா அமைப்புக்களும் ஊடகவிலாளர்களின் மரணத்தின்போது கண்டன அறிக்கை. ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம். மலர்வளையம் வைத்தல் போன்ற சம்பிரதாயங்களோடு தங்கள் பணியை முடித்துவிடுகின்றன.

தங்கள் உயிர்களைத் துச்சமாக்கி மரணித்துப்போன ஊடகர்களின் குடும்பங்கள் என்ன செய்கிறன. அவர்களது எதிர்காலம் அவர்களிற்கான நீதி போன்;ற விடையங்களில் மௌனித்துப்போனவர்களாகவே இருக்கின்றனர். நிலா ஆயுதம் ஏந்திய போராளிஅல்ல. அவன் பேனா தூக்கி எழுத்துக்களால் சாதிக்கத் துடித்த ஒரு பேனாப்போராளி. ஊடகத்துறையில் சாதிக்க களம்புகுந்து படுகொலை செய்யப்பட்வர்களில் அவனும் ஒருவன். இலங்கையின் கறைபடிந்த ஊடக ஐனநாயகத்தில் பக்கங்களில் நிலாவின் மணமும் ஒரு சகாப்தம்.

தூயவை துணிந்தபின் பழி வந்து சேர்வதில்லை – ச. நிலக்ஸன் கூறிய வாசகம்

கலியுகன்

(இருக்கிறம் வரமலர் 01.08.2011) வெளியிட்டது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com