சற்று முன்
Home / செய்திகள் / தோற்றாலும் வெற்றிபெற்றாலும் வடக்கின் பிரச்சினைகளை தீர்ப்பேன் – சஜித்

தோற்றாலும் வெற்றிபெற்றாலும் வடக்கின் பிரச்சினைகளை தீர்ப்பேன் – சஜித்

வடக்கில்  பெண் தலைமைத்துவ குடும்பம், நுண்கடன், வேலையாய்ப்பு போன்ற பல்வேறான பிரச்சனைகள் உள்ளன.  நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் வெற்றி  பெறாது போனாலும் இந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை பெற்றுகொடுப்பதற்கு முன்னிற்ப்பேன்.என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சஜித் இன்றய தினம் யாழில் பல தேர்தல் பராப்புரை கூட்டங்களில் பஙகுபற்றினார். அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனதிபதித் தேர்தலில் வாக்களித்த வடக்கு கிழக்கு மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொளக்கிறேன். யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட்ங்களில் எனது மேற்ப்பார்வையின் கீழ் அபிவிருத்தி செயலணி ஒன்றை உருவாக்கி இவ் மாவட்ட்ங்களை அபிவிருத்தி செய்வதே எனது நோக்கமாகும்.

எதிர்வரும் 5ம் திகதி நாங்கள் அரசாங்கத்தை பொறுபேற்போம். அதன் பின்னர் மக்களுக்கு பல திட்ட்ங்களை முன்னெடுக்க இருக்கின்றோம். அதன் ஒரு கட்டமாக வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட, வருமானம் குன்றிய ஒவ்வொரு  குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்காக தலா 20 000 ரூபாயினை வழங்க உள்ளோம்.

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை குறைவடைந்துள்ளது. அனால் இப்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம்  எரிபொருளின் விலையை குறைப்பதாக இல்லை. 5ம் திகதி அரசாங்கத்தினை அமைக்கின்ற போது 24 மணித்தியாலத்திற்குள் எரிபொருள் விலையினை குறைப்பேன் என்ற உறுதிமொழியினை வழங்குகின்றேன்.          

நாங்கள் அரசாங்கத்தினை பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்குள் நான்கு வீதத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலுக்கான கடன்களை வழங்குவோம்.

2009 மே 18 யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்களை கடந்த்துள்ளது. இதுவரை காலமும் உங்களுடைய வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் வடக்கை அபிவிருத்தி செய்தார்களா என கேள்வி எழுப்பினால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.

என்னிடம் பொய் இல்லை. நான் வெற்று கோசங்களை எழுப்பவில்லை. நீங்கள் நம்பிக்கையாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று சொல்லுங்கள் சஜித் பிரேமதசா எமது பிரதேசத்தியின் அபிவிருத்தியை பொறுப்பெற்கின்றார் என்று. யாழ் தேர்தல் மாவட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வெற்றிகொண்டு மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முழுமையாக மேற்கொள்வோம்.

மக்களாட்சி என சொல்லில் மாத்திரம் இருக்காமல் செயலிலும் இருக்க வேண்டும் என நாம் எண்ணுகின்றோம் . மக்கள் தமது பிரதேசங்களில் அபிவிருத்தி திட்ட்ங்களை மேற்க்கொள்ள கிராம இராட்சியம் நகர இராட்சியம்  போன்ற திட்ட்ங்களை கொண்டுவரவுள்ளோம்  
         
வடக்கு மக்களினுடைய வலி வேதனை எனக்கு தெரியும். வடக்கு மக்கள் எவ்வாறான வாழ்க்கையினை கொண்டுநடத்துகின்றனர் என தெரியும். அவர்களுடைய பொருளாதார சிக்கல்கள் தொடர்பிலும் நான் நன்கு அறிவேன். இலங்கையின் அரசியல் அமைப்பின் மூலம் நாட்டில் வாழும்  அனைவரும் சமமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

நாம் இலங்கையர்கள் நாம் இலங்கையை ஒன்றாக முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எண்கள் எல்லோர் மனதிலும் எழவேண்டும் என்றார்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com