சற்று முன்
Home / செய்திகள் / தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை மனித உரிமை மீறல் பிரச்சினையாகும் – அமைச்சர் ராதா தெரிவிப்பு

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை மனித உரிமை மீறல் பிரச்சினையாகும் – அமைச்சர் ராதா தெரிவிப்பு

Radhakrishnanதோட்ட தொழிலாளர்களின் உரிமை பிரச்சினைகள் தோட்ட அதிகாரிகளிடமும், கங்கானிகளிடமும் பேசப்பட்டு தீர்வு காணப்படுகின்றது. ஆனால் இவர்கள் உரிமையற்று இருக்கும் வீட்டு பிரச்சினை, காணி பிரச்சினை தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய மனித உரிமை மீறல் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனை எதிர்காலத்தில் மனித உரிமை மீறல் அமைப்பின் மூலம் தீர்வு காணப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினதும் எண்ணக்கருவிற்கமைய உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினது நிதியிலிருந்து கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் அவர்களினது வேண்டுக்கோளுக்கினங்க அட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்கு செல்லும் 1.5 கிலோ மீற்றர் பாதையை செப்பணிடுவதற்கு 04.12.2016 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவை இணைந்து செயல்படும் இந்நிலையில் மக்களுடைய பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. இதில் யார் யாரையும் ஏமாற்ற முடியாது.

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று வடக்கு, கிழக்கு தமிழ் பிரதிநிதிகள் மற்றும் ஜே.வீ.பீ போன்ற கட்சி தலைவர்கள் ஊடாக பேசப்படுகின்றது. வீடு, காணி, மனித உரிமை போன்ற விடயங்கள் அங்கே பேசப்படுகின்றன.

தேசிய ரீதியாக பேசப்படும் இப்பிரச்சினைகள் சர்வதேச ரீதியாகவும், பேசப்படும் வழிவகைகளை எதிர்காலத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்கும். யாழ்ப்பாணத்தில் அங்குள்ள மக்களுடைய பிரச்சினைகள் சர்வதேச மட்டத்திலும், மனித உரிமை மீறல் அமைப்பின் ஊடாகவும் பேசப்பட்டு தீர்வுகள் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்தவகையில் தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் வாழ்வாதார உரிமை பிரச்சினைகள் சர்வதேச மட்டத்தில் பேசப்பட வேண்டும். இதைவிடுத்து நாம் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தோட்டத்தின் அதிகாரிகள், கங்கானிகள் ஊடாக பேசி வருகின்றோம். இது எடுப்பான ஒன்று அல்ல.

காணி, வீடு, கல்வி போன்ற இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேசிய ரீதியில் கட்சிகள் மற்றும் அரசியல் ரீதியாக ஒற்றுமையும்  தேவைப்படுகின்றது. அதேவேளை ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயற்படும் வாய்ப்பும் தற்பொழுது கிட்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

அதேவேளை நடைமுறையில் உள்ள தற்போதைய தேர்தல் முறைபடி எதிர்வரும் தேர்தலை நடாத்த இந்த அரசாங்கம் முன்வர வேண்டும். புதிய முறை தேர்தலை ஜே.வீ.பீ எவ்வாறு எதிர்க்கின்றதோ அவ்வாறே தமிழ் முற்போக்கு கூட்டணியும் எதிர்க்கின்றது. ஆக பழைய முறையிலான தேர்தல் முறையை கொண்டு தேர்தல் நடத்தும் பட்சத்தில் அதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவை தரும் என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com