தோட்ட தேயிலை நிலங்களை தொழிலாளர்களுக்கு பிரித்துக்கொடுக்க வேண்டும் – ஆறுமுகன் தொண்டமான்

தோட்ட தொழிலாளர்கள் தொழிலுக்கு சமூகமளிக்காத பட்சத்தில் தேயிலை நிலங்களை மூடுவதாக கம்பனிகள் அறிவித்து வருகின்றது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் நம்மில் படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புகளை பெற்று குடும்பங்களை காப்பாற்றுவார்கள். ஆயின் மூடப்படும் தோட்ட காணிகள் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

டிக்கோயா போடைஸ் பிரிவு, புளியாவத்தை பீரட் பிரிவு, இன்ஜெஸ்ட்ரி கீழ்பிரிவு, எலிபடை கீழ்பிரிவு, பொகவந்தலாவ கீழ்பிரிவு, வெஞ்சர் தோட்டம் ஆகிய பிரதேசங்ககளில் 25.07.2016 அன்று பாதைக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறப்பு விழாக்களில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண விவசாயதுறை அமைச்சர் எம்.ராமேஷ்வரன், முன்னால் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஷ் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொழிலாளர்கள் சம்பளம் விடயம் மற்றும் தேயிலை காணி பிரிப்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துகையில் மேலும் அவர் தெரிவித்தாவது,

தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினை அடுத்த மாத முதல் வாரத்தில் பேசப்பட இருக்கின்றது. இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொனிப்பொருளாகும். சம்பள பிரச்சினை பேசப்படும் காலப்பகுதியில் சிலர் இதனை குழப்பி அடிப்பதற்கு வருவது வழக்கம். அந்த நிலையினாலேயே இந்த சம்பள பேச்சு வார்த்தை இழுபறி நிலையை அடைந்தமைக்கு ஒரு காரணமாகும்.

ஆனால் சம்பள பிரச்சனையில் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட கூடிய தொழிற்சங்கங்களை தவிர்த்து ஏனைய தொழிற்சங்கங்களே இவ்வாறான குழப்பிநிலையை உருவாக்கி வருகின்றனர்.

பாராளுமன்றத்திற்குள் பெற்றோலை எடுத்து  செல்வது தவறு. தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்காக இவ்வாறு பெற்றோலை எடுத்து செல்பவர். தான் தீ மூட்டிக்கொள்வதாகவும், சம்பள பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும், தெரிவித்தார். அவ்வாறு செயல்பட்ட அவர் பாராளுமன்றத்தில் உள்ளே சென்று தான் தீ குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாராளுமன்றத்தின் வெளியிலேயே தீ குளித்திருக்கலாம்.

இவ்வாறான குழப்ப நிலைகளையே  கையாண்டு வருவதானால் தீர்க்கமான முடிவுகளை எட்ட முடியாமல் இருக்கின்றது. அண்மையில் ஊடகம் ஒன்றின் செய்தியில் 2500 ரூபாய் வழங்குவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

2500 ரூபாய் என்பது தொழிலாளர்கள் 25 நாட்கள் வேலை செய்திருந்தால் 2500 ரூபாய் கிடைக்குமாம். ஆனால் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதமாம். அப்படி என்றால் 10 நாள் வேலை செய்தால் 1000 ரூபாய் தான் கிடைக்கும்.

ஆனால் 2500 ரூபாவை மானியமாக வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளமை வரவேற்கதக்கது. ஆனால் இத்தொகையானது எத்தனை நாள் வேலை செய்தாலும், முழுமையாக கிடைக்க வழி செய்வார்களா ? என கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் கம்பனிகளிடம் கேட்டபொழுது இத்தொகையினை வழங்குவதற்காக அரசாங்கம் கம்பனிகளுக்கு கடனாகவே இத்தொகையை வழங்கியுள்ளார்களாம் என்பது தெரியவந்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் ஊடாக எமது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4000 வீடுகள் இ.தொ.காவின் முயற்சினாலேயே பெறப்பட்டது. ஆனால் அரசாங்கம் மாற்றம் பெற்றதன் பின் இவ்வீடுகளை நாங்கள் தான் பெற்றுக்கொடுத்தோம் என சிலர் தம்பட்டம் அடிக்கின்றார்கள்.

 தோட்ட தொழிலாளர்கள் தோட்டத்திலேயே வாழ வேண்டும் என இ.தொ.கா நினைப்பதாக பலர் தோட்டங்கள் தோறும் சொல்லி வருகின்றனர். இந்த செய்தி ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. தொழிலாளர்கள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல முடியும். எப்படி வேண்டுமென்றாலும் வாழ முடியும். ஆனால் தமது பூர்வீக இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். நமது பாட்டன், பூட்டன் உழைப்பினாலே உருவாக்கப்பட்டது மலையகம். இந்த மலையக மன்னை இன்று ஆள கூடியவர்கள் தொழிலாளர்கள்..
 இந்த நிலையில் கம்பனிகள் தோட்டங்களை மூடுமாக இருந்தால் மூடப்படும் தோட்ட தேயிலை நிலங்களை தொழிலாளர்களுக்கு பிரித்துக்கொடுக்க வேண்டும். என்பதை நாம் கம்பனிகளுக்கு அறிவித்து வருவதாக இவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.IMG_00054 (1) IMG_00054 (2) IMG_00054 (3) IMG_00054 (4) IMG_00054 (5) IMG_7971 IMG_8005 IMG_8048

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com