தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் ஒரு மாதத்துக்குள் கைச்சாத்தாகும் – முத்து சிவலிங்கம்

muthusivalingamதோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இன்னும் ஒரு மாதத்துக்குள் கைச்சாத்திடப்படும். இதில் எந்த அளவு தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாது காரணம் ஏனைய துறைகள் போலன்று வரிகள் மூலமாக சம்பளத்தை கூட்டிக் கொடுக்க முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

அட்டன் சீடா மையத்தில் அமைந்துள்ள மலையக கல்வி தகவல் மையத்தின் பொறுப்பாளராக மிக நீண்ட காலமாக கடமையாற்றிய எம்.ஆர்.விஜயானந்தன் அரச பணியில் இருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  “நட்புநலன் ஓம்பல் மகிழ்வுபசாரம்” நிகழ்வு அண்மையில் அட்டன் மலையக கல்வி அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது.

 

இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது உற்பத்தினை அடிப்படையாகக் கொண்டே சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது இந்நிலையில் இன்று தேயிலையின் விலை உலக சந்தையில் குறைந்துள்ளதுடன் பல நாடுகள் தேயிலை உற்பத்தியில் முன்நிலையில் உள்ளன எனவே தான் குறிப்பிட்ட நேரத்தில் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது இம்முறை பேச்சு வார்த்தையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் பெற்றுக்கொடுக்கபடுமா என ஊடகவியலாளர்  எழுப்பிய கேள்விக்கு கடந்த காலங்களில் இ.தொ.கா நிலுவை சம்பளத்துடனேயே சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்துள்ளது.

ஆனால் இம்முறை இடைக்கால கொடுப்பனவு பெற்றுக்கொடுத்தன் காரணமாக அமைச்சரவை ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதன் காரணமாகவும் இன்று நிலுவை சம்பளம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் கூட்டு ஒப்பந்தம் கடந்த வருடம் மார்ச் 31ம் திகதி காலாவதியாகியது இந்நிலையில் சுமார் ஒருவருடமும் 6 மாதமும் கழிந்த நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கவில்லை சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கும் வரை தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 2500 கொடுப்பனவும் இரண்டு மாதம் மாத்திரம் வழங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக விளங்கும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் உடனடியாக பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பொருளாதார சுமை குறைக்கப்பட வேண்டும் எனவும் பல்வேறு அமைப்புக்கள் சுட்டிக்காட்டியதுடன் தோட்டத்தொழிலாளர்களும் தமது நியாயமான சம்பளத்தினை பெற்றுத்தருமாறு போராட்டம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com