தோட்டக்கிணற்றில் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு

நீர்வேலி தெற்கு மாசிவன் பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து நேற்று(10) இரவு மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியினை சேர்ந்த சபாரத்தினம் கீதாலக்ஸ்மி வயது (77) என பொலிஸார் மேலும் கூறினர்.

நேற்று மாலை மூதாட்ட காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. எங்கும் காணத நிலையில் உறவினர்கள் அயலில் உள்ள தோட்டக்கிணறுகளை தேடியுள்ளனர்;. இரவு 8:30 மணியளவில் வீட்டில் இருந்து 50மீற்றர் தூரத்தில் உள்ள கிணறு ஒன்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. ஸ்தல விசாரணைகளை திடிர்மரணவிசாரணை அலுவலர் என்.உதயசிறி மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com