சற்று முன்
Home / செய்திகள் / தொழில் வான்மை விருத்தி செயலமர்விற்கான அழைப்பு

தொழில் வான்மை விருத்தி செயலமர்விற்கான அழைப்பு

கைத்தொழில் பணிகளில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் தொழில்சார் வான்மை விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் வறுமை ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டுக்கான செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு சிறிலங்கன் பவுண்டேசன், மண்டபத்தில் நாளை 24.09.2019 மாலை 4 மணி முதல் 6 மணிவரை நடைபெறவுள்ள குறித்த தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுக்கான செயலமர்வில் ஆர்வமுள்ளவர்களை பங்குபற்றி தங்களது தொழில்சார் திறனை மேலும் வளர்த்துக்கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த செயலமர்வில் நகரங்களில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி பின்னர் தங்களது ஊர்களுக்குத் திரும்பியவர்களது தொழில்சார் திறமைகளை விருத்திசெய்தல் மற்றும் அவர்களை ஊக்குவித்தல் தொழில் முனைவோருக்கான தகமைகளை மேம்படுத்தல் உள்ளிட்டவை தொடர்பாக கருத்துப்பகிர்வுகள் இடம்பெறும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com