சற்று முன்
Home / செய்திகள் / தொழில் கற்கை மாணவர்களுக்கு தினம் 500 ரூபா கொடுப்பனவு

தொழில் கற்கை மாணவர்களுக்கு தினம் 500 ரூபா கொடுப்பனவு

அரச பாடசாலைகளில் தரம் 13 வரை கல்வி கற்கவேண்டும் என்ற நடைமுறையின் கீழ் தேசிய தொழில் ஆற்றல் (NVQ) 4 மட்ட சான்றிதழை வழங்குவதற்கு அனுமதியுள்ள தொழில் பயிற்சி நிறுவனத்தில் கல்வியை தொழில் கற்கை நெறியைத் தொடரும் மாணவர்களுக்கு நாள் ஒன்று 500 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பில் அமைச்சரவையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச பாடசாலைகளில் தரம் 13 வரையிலான கல்வி நடவடிக்கையின் கீழ் பாடசாலை ஊடாக நிறுவனப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தரம் 13 உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் கற்கைநெறியை தொடரும் மாணவர்கள் 2ஆம் கல்வி ஆண்டில் தெரிவுசெய்யப்பட்ட தொழில் விடயத்துக்கான தேசிய தொழில் ஆற்றல் (NVQ) 4 மட்ட சான்றிதழை வழங்குவதற்கு அனுமதியுள்ள தொழில் பயிற்சி நிறுவனத்தில் கல்வியை பெறவேண்டியுள்ளது.

இவ்வாறான தொழில் பயிற்சி நிறுவனங்கள் பல முக்கிய நகரங்களில் அமைந்துள்ளமை மற்றும் சில பயிற்சி நிறுவனம் ஒரு இடத்தில் மாத்திரம் அமைந்திருப்பதன் காரணமாக சில மாணவர்கள் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக தொகையை செலவிடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலை ஊடாக நிறுவனப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகளுக்காக நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com